ஸ்டாலின் - விஜய் சந்திப்பின் பின்னணி என்ன? - ஜெயக்குமார் விளக்கம்

நடிகர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தது ஏன் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

Last Updated : Sep 5, 2019, 09:07 AM IST
ஸ்டாலின் - விஜய் சந்திப்பின் பின்னணி என்ன? - ஜெயக்குமார் விளக்கம் title=

நடிகர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தது ஏன் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்!

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த மு.க.செல்வியின் பேத்தியான ஓவியாவின் நிச்சயதார்த்த விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டார். இதில் திமுக தலைவர் ஸ்டாலினும் , விஜயும் சந்தித்துக்கொண்டார்கள். அப்போது, நடிகர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் கைகுலுக்கி வரவேற்றார். 

நடிகர் விஜய் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இடையிலான சந்திப்பு வைரலானது. நடிகர் ரஜினி அதிமுகவிற்கு நெருக்கமாக இருப்பதால் திமுக விஜயை இழுக்க பார்க்கிறதா என்று பலரும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜயை சந்தித்தாலும் அமெரிக்கா, ரஷ்ய அதிபர்களை சந்தித்தாலும் எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயர் நகரில், சமூக நலத்துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களான அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சரோஜா கலந்துக்கொண்டனர். ஊட்டச்சத்தான உணவு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூட்டத்தில் இருந்தவர்களிடமும் கேள்விகள் கேட்டு சரியான பதில் சொன்னவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார்.

இதை தொடர்ந்து செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வது தமிழ்நாடு அரசு எடுக்கும் ஒரு நல்ல முயற்சியாக பார்க்க வேண்டும் என்றும் இதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பாராட்டி இருந்தால் அவர் மீதுள்ள மதிப்பு கூடியிருக்கும். திமுக நடிகர் விஜயை கட்சிக்குள் சேர்க்க பார்க்கிறது. திமுக யாரை போய் பார்க்க வேண்டுமோ பார்க்கட்டும். ரஷ்யா, சீனா அதிபர்களை கூட திமுக போய் சந்திக்கட்டும், அவர்கள் யாரை கட்சிக்குள் சேர்த்தாலும் எங்களுக்கு கவலை கிடையாது, என்றும் தெரிவித்தார்.

 

Trending News