ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு வந்திருக்கும் முக்கிய கோரிக்கை..! நிறைவேற்றுவார்களா?

கரையான் அரித்த பலகையைப் போல் அதிமுகவை ஆக்கிவிடாதீர்கள் என ஜெயலலிதாவின் உதவியாளராக பணியாற்றிய பூங்குன்றன் முகநூலில் கோரிக்கை வைத்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 3, 2023, 08:09 AM IST
  • அதிமுக தலைமைக்கு ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் கோரிக்கை
  • அதிமுக பலகையை கரையான் அரித்த பலகையாக மாற்றிவிடாதீர்கள்
  • அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள், அன்போடு பழகுங்கள்
ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு வந்திருக்கும் முக்கிய கோரிக்கை..! நிறைவேற்றுவார்களா? title=

அவர் எழுதியிருக்கும் பதிவில், "நவநீதகிருஷ்ணன் மீது எடுத்த நடவடிக்கை இப்போது தேவைதானா?. இப்போது இந்த நடவடிக்கை ஆரோக்கியமானதா?. அவர் பேசியது தவறு என்று நீங்கள் நினைத்தால் கட்சியை விட்டு நீக்கி இருக்கலாமே?, அதை விட்டுவிட்டு வழக்கறிஞர் பிரிவின் செயலாளர் பதவியில் இருந்து நீக்க என்ன காரணம்?. அவர் பேசியது தவறுதான் மாற்றுக் கருத்தில்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதிவியில் அவர் இருக்கும்போது அவரிடம் விளக்கம்கேட்டு நோட்டீஸ் கொடுத்திருக்கலாமே?. அதன் பிறகு நடவடிக்கை எடுத்திருக்கலாமே?.

ALSO READ | எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கும் திமுக தலைவர் - மாறுகிறதா அரசியல் நாகரிகம்!

நடவடிக்கையில் என்ன பாரபட்சம்? தொண்டர்களுக்கு ஒன்று? தலைவர்களுக்கு ஒன்றா?. இதையெல்லாம் நான் கேட்பதற்குக் காரணம் இருக்கிறது. மகளிரணி செயலாளர், மீனவர் பிரிவு செயலாளர், வர்த்தக பிரிவு செயலாளர் பதவியில் இருக்கும் போதே மாற்றுக் கட்சிக்கு சென்றுள்ளனர். மாநில பொறுப்பில் உள்ளவர்கள் ஏன் கட்சி மாறுகிறார்கள் என்று ஆராய்ந்தீர்களா?. இப்படி மாநிலச் செயலாளர்களே மனம் மாறினால் கட்சியின் நிலை என்ன?. கட்சி எங்கே போய்க் கொண்டிருக்கிறது?. இப்படி போய்க் கொண்டிருப்பது கட்சிக்கு நல்லதா? இது என் கேள்வி அல்ல! தொண்டர்களின் கேள்வி!.

கரையான் அரித்த பலகையைப் போல் கழகத்தை ஆக்கிவிடாதீர்கள். அன்பால் அரவணையுங்கள், ஆறுதலாய் பேசுங்கள். பொறுப்பு வழங்க மனம் இல்லை என்றாலும் உழைப்பவர்களுக்கு மரியாதை கொடுங்கள். அன்பாய் பேசினாலே யாரும் கழகத்தைவிட்டு செல்லமாட்டார்கள்.  உழைப்பவர்களிடம் பேசுவதால் ஒன்றும் உங்கள் தகுதி குறைந்துவிடாது. நீங்களும் தொண்டராக இருந்து உயர்ந்தவர்கள் தான். உள்ளாட்சித் தேர்தலில் கட்சியை விட்டு சென்று மீண்டும் இணைந்தவர்களுக்கு, இணைய ஆசை உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் மற்றவர்களின் ஒப்புதலோடு வாய்ப்பு கொடுத்தால் கழகம் உள்ளாட்சித் தேர்தலில் உறுதிப்படும். 

ALSO READ | முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மேல்முறையீட்டு மனு விசாரணை அடுத்த வாரம்- Madras HC

தேர்தல் தோல்விக்கு பிறகு மாற்றங்களை செய்ய நீங்கள் நினைக்க வேண்டும். தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயலவேண்டும். தகுதி இல்லாதவர்களை மாற்றுவதன் மூலமே உங்களை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள முடியும். இதைக் சொல்வதால் என்னை நீங்கள் விமர்சனம் செய்யலாம். நான் சொல்வது கட்சியின் நலனுக்கே!. தொண்டர்களையும், நிர்வாகிகளையும் ஒரே தட்டில் வைத்துப் பாருங்கள். மாற்றத்தை செய்து மாற முயற்சி செய்யுங்கள்" என அதிமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News