ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் ஒருவர் திடீரென தன் மீதும், குழந்தையின் மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
அங்கு செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள் இதனைக் கண்டதும் உடனடியாக சுதாரித்து அப்பெண்ணின் கையிலிருந்து தீப்பெட்டியை பறித்து அவரை சமாதானப்படுத்த முயன்றனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கேட்டபோது, தனது கணவர் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கைவிட்டு விட்டதாகவும், பெண் குழந்தை பிறந்ததும் தன்னைப் பார்க்கக்கூட வரவில்லை எனவும் அப்பெண் தெரிவித்துள்ளார். அவரது கணவர் ரமேஷ் கீழக்கரை கிளை இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வருவதாகவும், ரூ.5 லட்சம் கேட்டு 15 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்றதாகவும், அப்பெண் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பெண் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க | கோமியம் குடிக்க வைத்து சித்திரவதை: கணவருக்கு 7 ஆண்டு சிறை!
இச்சம்பவம் குறித்துக் கூறிய பத்திரிகையாளர்கள், வழக்கமான செய்தி சேகரிப்புக்காக குறை தீர்க்கும் முகாமில் இருந்தபோது ஒரு பெண் தன் மீதும், தன் மகளின் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குச்சியைப் பற்ற வைக்க முயன்றதாகவும், 3 பத்திரிகையாளர்கள் உடனடியாகச் சென்று அவரிடமிருந்து தீப்பெட்டியைப் பறித்ததாகவும் கூறினர். இதனைத் தொடர்ந்து, சேது, குமார் மற்றும் வீரா ஆகிய செய்தியாளர்கள் காவல்துறைக்கு
தகவல் அளித்து அப்பெண்ணை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அண்மையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கிய நோயாளிகளை பத்திரிகையாளர்கள் மீட்ட சம்பவம் பாராட்டப்பட்ட நிலையில், தற்போது தற்கொலைக்கு முயன்ற பெண்ணை பத்திரிகையாளர்கள் பத்திரமாக மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
மேலும் படிக்க | கழிவறையால் உயிரை விட்ட காதல் மனைவி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR