கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய தலைநகரில் தனது அரசாங்கம் மேற்கொண்ட பணிகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் "பிரகடனத்தை" கமல்ஹாசன் பாராட்டினார்.
கெஜ்ரிவாலை ஒரு "சாதனையாளர்" என்று பாராட்டிய கமல் ஹாசன், நாடு முழுவதும் உள்ள தலைவர்களை கெஜ்ரிவாலின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார். இது தொரப்பாக நடிகர்-அரசியல்வாதி கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டிவீட் பதிவில்.,
What a proclamation by an achiever called @ArvindKejriwal. This seemingly astounding feat is imitable, if one has the moral and ethical strength. Do not just follow this leader, emulate him. (1/2) pic.twitter.com/pkYQ9EkccY
— Kamal Haasan (@ikamalhaasan) January 28, 2020
This is not an advice. This is a challenge. Take it, I have. He is a leader, so are you, so am I.
I salute my brother in arms. DELHI DOOR NAHIN...(2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) January 28, 2020
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்தின் பதவிக்காலம் பிப்ரவரி 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது, அதற்கு முன்னர் ஒரு புதிய சபை அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தற்போது டெல்லி சட்டமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.
டெல்லி சட்டபேரவைக்கான தேர்தல் ஒரு கட்டமாக நடைபெறும். வாக்குப்பதிவு பிப்ரவரி 8-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவிப்பின் படி ஜனவரி 6, 2020 நிலவரப்படி டெல்லியின் இறுதி வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர்கள் 1,46,92,136-ஆக பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,689 இடங்களில் அமைக்கப்படும் 13,750 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முன்னதாக, 2015 டெல்லி சட்டமன்றத் தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 70 இடங்களில் 67 இடங்களை வென்று டெல்லியில் ஆட்சி பிடித்தது. முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 2015-ல் பாரிய வெற்றியைப் பதிவு செய்த பின்னர் தற்போது மீண்டும் தேர்தலை எதிர்கொள்கிறது.
டெல்லியின் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை வீடு வீடாகச் சென்று தங்கள் பிரச்சாரங்களை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.