இனி ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தபோவதில்லை என என நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பிரபல இயக்குநர் மற்றும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அகர்களால் தொகுத்து வழங்கப்பட்டது. குடும்பப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடம் பரவலாகச் சென்றடைந்த இந்த நிகழ்ச்சி குறித்து எதிர்ப்புக் குரல்களும் கிளம்பின. இதனால், இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார் லட்சுமி ராமகிருஷ்ணன். அவருக்குப் பதிலாக நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார்.
எனினும், முன்பைப்போல இந்த நிகழ்ச்சி வரவேற்பைப் பெறவில்லை என்பதால் மொத்தமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வேறொரு தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நடத்தப் போகிறார் எனத் தகவல் பரவியது. ஆனால், அது பொய்யான தகவல் என அவர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
There is a rumour that I have signed up to do #Sollvathellamunmai for another channel, i clarify that I will not be hosting #SU for any other channel. I did my best for the show & it is over, wonderful tenure with @ZeeTamil approached by other channels but will not do #SU
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) March 9, 2019
Love for #SollvathellamUnmai has no expiry date overwhelmed by the affection showered by so many followers at Kannagi Nagar women’s day celebrations. Spoofs or defaming films don’t matter so far as people recognise honesty @ZeeTamil pic.twitter.com/iyeGLxBD0y
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) March 10, 2019
“வேறொரு சேனலில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சிக்காக நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகப் செய்திகள் பரவுகின்றன. ஆனால் அது உண்மை இல்லை, வேறெந்த சேனலிலும் நான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.
அந்த நிகழ்ச்சிக்காக என்னால் முடிந்த சிறந்த பணியைச் செய்தேன். அந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது. ஜீ தமிழுடன் அற்புதமான காலம். மற்ற சேனல்கள் என்னை அணுகுகின்றனர். ஆனால், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நான் நடத்தமாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.