சேலம்: அதிமுக உறுப்பினரால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக, ஒன்றிய கவுன்சிலர் வெளியிட்டுள்ள வீடியோவால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் குழுவில் தலைவர் ஜெகநாதன் மீது கடந்த வாரம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது அதிமுக கவுன்சிலர் 2 பேர் நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அவரது பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக கவுன்சிலரை திமுகவினர் (DMK) வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று நம்பிக்கை இல்லா வாக்களிப்பில் பங்கேற்க வைத்ததாக நேற்று ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
காரில் சென்ற தங்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாகவும், இதனால் தாங்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஆடியோவில் சம்பந்தப்பட்ட ஒன்றியகுழு உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் அச்சுறுத்தலின் பேரிலேயே இதுபோன்ற ஆடியோவை வெளியிட்டதாக ஒன்றியக் குழு உறுப்பினர் பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்
அதிமுக (AIADMK) சட்டமன்ற உறுப்பினர் ராஜ முத்து மற்றும் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் ஆகியோரின் வற்புறுத்தலின் பேரில் தாங்கள் ஆடியோ பதிவிட்டதாகவும் ஒன்றியக்குழு உறுப்பினர் பூங்கொடி தெரிவித்துள்ளார். நேற்று திமுகவினர் தன்னை கடத்தியதாக ஆடியோ வெளியிட்ட பூங்கொடி தற்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினரின் தூண்டுதல் பேரிலேயே இதுபோன்ற ஆடியோ வெளியிட்டதாக பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR