IPL 2025 Mega Auction Retention List: ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும். அதாவது, மெகா ஏலம் என்றால் அனைத்து அணிகளும் தங்களின் பெரும்பாலான வீரர்களை ஏலத்திற்கு விடுவித்து, சில முக்கிய வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ளும். அந்த வகையில், 2025 ஐபிஎல் சீசனை முன்னிட்டு மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. மெகா ஏலத்திற்கான பாலிசிகள் மற்றும் விதிகளை பிசிசிஐ நேற்றிரவு அறிவித்துள்ளது.
அதாவது முன்னர் கூறியபோது போல் பெரும்பாலான வீரர்களை அணிகள் ஏலத்திற்கு விடுவிக்கும், சில முக்கிய வீரர்களை மட்டுமே தக்கவைக்கும். ஆனால், இந்த முறை ஒரு அணி மொத்தம் 6 வீரர்களை தக்கவைக்கலாம், ஏலத்தில் ஒரு RTM கார்டுகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்களை தக்கவைக்க எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. இதன்மூலம் 7 வீரர்களை ஒரு அணி மீண்டும் தனதாக்கிக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 5 Capped வீரர்களையும், 2 Uncapped வீரர்களையும் அணிகள் தக்கவைத்துக்கொள்ளலாம். மேலும் ஒரு அணியின் பர்ஸ் தொகையும் ரூ.120 கோடிக்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பர்ஸ் தொகை ரூ. 90 கோடியாக இருந்தது. மேலும் கடந்தமுறை RTM ஆப்ஷன் கிடையாது. ஒரு அணியால் கடந்த முறை நான்கு பேரை மட்டுமே தக்கவைக்க முடியும். அதுவும் அப்போது அதிகபட்சம் 3 இந்திய வீர்ரகள் அல்லது அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்களைதான் அணியால் தக்கவைக்க முடியும். இந்த முறை தக்கவைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது மட்டுமின்றி RTM ஆப்ஷனையும் வழங்கி, இந்திய வீரர்கள் - வெளிநாட்டு கட்டுபாடுகள் அனைத்தையும் தளர்த்தி உள்ளது. இதன்மூலம், அனைத்து அணிகளுக்கும் சாதகமாக தான் பிசிசிஐ இந்த விதிகளை கொண்டு வந்திருக்கிறது என நீங்கள் நினைக்கலாம்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2025 மெகா ஏலம்! புதிய விதிகள் எப்படி செயல்படும்? முழு விவரம்!
ஆனால், இங்குதான் பிசிசிஐ புது ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறது. அதாவது, கடந்த 2022 மெகா ஏலத்தில் முன்னர் சொன்னது போல் நான்கு ஸ்லாட்கள் தான். முதலாவது ஸ்லாட்டுக்கு ரூ.16 கோடியும், 2ஆம் ஸ்லாட்டுக்கு ரூ.12 கோடியும், 3ஆம் ஸ்லாட்டுக்கு ரூ.8 கோடியும், 4ஆம் ஸ்லாட்டுக்கு ரூ.4 கோடியும் (Uncapped Slot) ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 2025 மெகா ஏலத்திற்கு இங்குதான் பிசிசிஐ அனைத்து அணிகளும் ஆப்பு வைத்திருக்கிறது எனலாம்.
தற்போது முதலாவது ஸ்லாட்டுக்கு ரூ.18 கோடியும், 2ஆம் ஸ்லாட்டுக்கு ரூ.14 கோடியும், 3ஆம் ஸ்லாட்டுக்கு ரூ.11 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 4ஆம் ஸ்லாட்டுக்கு ரூ.18 கோடியும், 5ஆம் ஸ்லாட்டுக்கு ரூ.16 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது, கடைசி ஸ்லாட் கடந்த முறையை போல் ரூ.4 கோடிக்கு Uncapped வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் மூன்று ஸ்லாட்களையும், கடைசி ஸ்லாட்டையும் அனைத்து அணிகளும் பயன்படுத்திக்கொள்ளும். இடையில் இருக்கும் இந்த 4ஆவது, 5ஆவது ஸ்லாட்தான் பல அணிகளுக்கு தலைவலியை கொடுக்கும்.
கடைசி நாள் என்ன?
அந்த இரண்டு ஸ்லாட்களில் நீங்கள் அதிமுக்கிய வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். ஏனென்றால் ரூ. 18 கோடிக்கும், ரூ.14 கோடிக்கும் ஏலத்தில் போகாத வீரரை அந்த ஸ்லாட்களில் தக்கவைத்தால் உங்களுக்குதான் நஷ்டம் என்பதால் பல அணிகள் இதுகுறித்து தீவிர ஆலோசனையில் இருக்கும். எனவே, சில அணிகள் வெறும் 4 ஸ்லாட்களை மட்டும் நிரப்பிக்கொண்டு அதிக தொகையுடன் மெகா ஏலத்திற்கு செல்ல விரும்பும் எனலாம்.
அந்த வகையில், அனைத்து அணிகளும் தங்களின் வீரர்களை தக்கவைக்கும் பட்டியலை வரும் அக். 31ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வீரர்களை அறிவிக்க அக். 31ஆம் தேதிதான் கடைசி நாள் என்றால் அதன்பின் டிசம்பர் மாதத்திற்குள் ஐபிஎல் ஏலமும் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ