Tamil Nadu Today Latest News Live Updates: தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (டிச. 21) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசனாது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் (Tamil Nadu Weather Forecast) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அரசு முறை சுற்றுப்பயணம் (PM Modi Kuwait Visit) மேற்கொள்கிறார். இரண்டு நாள்கள் பயணமான இதில் அவர் அந்நாட்டு தலைவர்களுடன் இருநாட்டு நல்லுறவு, வணிகம், பாதுகாப்பு துறை உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். தொடர்ந்து அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் உறையாற்றும் அவர் Gulf Cup கால்பந்து தொடரையும் தொடங்கிவைக்கிறார். இதன்மூலம், 43 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் குவைத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், உள்ளூர், மாநில, தேசிய, அரசு திட்டங்கள், ஆன்மீகம், விளையாட்டு, சினிமா, வணிகம், அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் என இன்றைய (டிச. 21) முக்கிய செய்திகளின் லேட்டஸ்ட் அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.