Tamil Nadu Top News Today: தமிழ்நாட்டில் 18.05.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...
மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து சூடு வைத்த ஆசிரியர்
திவ்யா வயது 27. இவருடைய கணவர் முத்து கிருஷ்ணன் நான்கு வருடத்திற்கு முன்பு இறந்த விட்டார். இவருக்கு 10 வயதில் ஒரு மகனும் 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது 6 வயது மகள் பிறந்தது முதல் மனவளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளதால் அவரை பெரம்பூ ரில் உள்ள ஸ்பெஷல் மாணவர்களுக்கான தனியார் பள்ளியில் கடந்த நான்காம் தேதி சேர்த்துள்ளனர்.
பேரறிவாளனை தழுவிய முதல்வர்!
சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேரறிவாளன் சந்திப்பு. பேரறிவாளனை ஆறக்கட்டி தழுவிய முதல்வர். அவருடன் அற்புதம்மாள் அவர்களும் இருந்தார்.]
பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கைது:
பழனியில் அனுமதி வழங்காத நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கைது செய்யப்பட்டார். எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி
பேரறிவாளன் விடுதலையில் ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது என விசிக மாநில துணைப் பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பட்டாசுத் தொழிலாளர்கள்!
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்தும், முறைகேட்டில் ஈடுபடும் பட்டாசு ஆலைகள் மற்றும் உச்சநீதிமன்ற நிபந்தனைகளை பின்பற்றாத ஆலைகளுக்கு அபராதம் விதித்தும் அதிகப்படியான முறைகேடுகளில் ஈடுபடும் பட்டாசு ஆலைகளை சீல் வைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் பட்டாசு ஆலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர் சுமார் 100 க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பேரறிவாளனின் விடுதலைமகிழ்ச்சி:
பேரறிவாளனின் விடுதலை தாமதமானாலும் மகிழ்ச்சி : உடல் நலம் பேண வேண்டும்: பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது .
பேரறிவாளன் விடுதலை காலம் கடந்த விடுதலையாக இருந்தாலும் தமிழ் உணர்வுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்கள் அனைவருக்கும் இதனை வரவேற்கின்றனர், ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கிடைத்த வெற்றி என்பதுதான் இந்த தீர்ப்பு என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பறை இசையடித்து இனிப்புகளை வழங்கி கண்ணீர் மல்க விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன்!
கடந்த மாதம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு சட்டபோராட்டங்களுக்கு பிறகு, இன்று உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கியது.
பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு சென்னை வந்து வந்து கொண்டிருக்கின்றனர் முதலமைச்சரை சந்திக்க வாய்ப்புள்ளது!
பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் அதிரடி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சிறுநீரக தொற்று மற்றும் பிற உடல்நல பாதிப்புகளுடன் இருந்து பரோலில் வந்த பேரறிவாளனுக்கு, தொடர் சிகிச்சை பெற வேண்டி முன்னர் 10 ஆவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது. அதன்கீழ் கடந்த மார்ச் 9 ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது, அவருக்கு முழு விடுதலை அளித்து உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
Supreme Court orders release of AG Perarivalan, one of the convicts serving life imprisonment in connection with the assassination of former Prime Minister Rajiv Gandhi.
— ANI (@ANI) May 18, 2022
இருச்சக்கர வாகனம் நேர்க்கு நேர் மோதியதில் தேர்வுக்கு சென்ற 10 ஆம் வகுப்பு மாணவன் சந்துரு சம்பவ இடத்திலே உயிரிழப்பு. அவருடன் வாகனத்தில் சென்ற பதினோறாம் வகுப்பு மாணவன் பரத் (17) பலத்த படுகாயம் அடைந்துள்ளதால், அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற அலுவல் மொழி ஆய்வுக்குழுவின் மதுரை வருகை, அலுவல் மொழி விதிகளுக்கு முரணானது. மதுரை பயணத்தை ரத்து செய்யுங்கள். தமிழகத்துக்கான ஆய்வினை இனி திட்டமிடாதீர்கள். இவை கோரிக்கையல்ல, சட்டம் தமிழகத்துக்கு கொடுத்துள்ள விதிவிலக்கு. அதனை மதிப்பதே ஆட்சி மொழிக்குழுவின் கடமையுமாகும் - சு. வெங்கடேசன் எம்.பி கடிதம்
ஜெய்பீம் பட விவகாரம்: நடிகர் சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு
ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பருத்தி நூல் விலை உயர்வு: மத்திய மந்திரிகளுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு
மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோரை தமிழக எம்.பி.க்கள் இன்று நேரில் சந்தித்து நெசவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு வலியுறுத்துகிறார்கள்.
42வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை
இந்தியாவில் மற்ற பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், நாடு முழுக்க பெட்ரோல், டீசல் விலையில் 42வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை.
பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் - இந்திய வானிலை மையம்
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.