அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நெல்லையில் சிம்லா முத்துச்சோழன்!

அதிமுக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அஇஅதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 21, 2024, 12:08 PM IST
  • அஇஅதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்
  • நெல்லையில் போட்டியிடுகிறார் சிம்லா முத்துச் சோழன்
  • அண்மையில் திமுகவில் விலகி அதிமுகவில் சேர்ந்திருந்தார்
அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! நெல்லையில் சிம்லா முத்துச்சோழன்! title=

லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் திமுக 21 தொகுதிகளிலும் எஞ்சிய தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. ஏற்கனவே 16 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அதிமுக, இப்போது சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறும் விளவங்கோடு உள்ளிட்ட எஞ்சிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ’மாட்டுக்கறி திங்கிற பொறுக்கி நாய்களே’ நாமக்கல் திமுக கூட்டணி வேட்பாளர் சர்ச்சை பேச்சுகள்

2ம் கட்ட அதிமுக  வேட்பாளர் பட்டியல் 

ஸ்ரீபெரும்புதூர் - பிரேம்குமார், வேலூர் - பசுபதி, திருவண்ணாமலை - கலியபெருமாள், தருமபுரி - அசோகன், நீலகிரி - தமிழ்செல்வன், மயிலாடுதுறை - பாபு, கள்ளக்குறிச்சி - குமரகுரு, திருப்பூர் - அருணாச்சலம், கோவை - ராமச்சந்திரன், பொள்ளாச்சி - அப்புசாமி என்கிற கார்த்திகேயன், திருச்சி - கருப்பையா, பெரம்பலூர் - ஏடி சந்திர மோகன், சிவகங்கை - மணக்குடி சேகர் தாஸ், தூத்துக்குடி - சிவசாமி வேலுமணி, நெல்லை -சிம்லா முத்து சோழன், புதுச்சேரி - தமிழ்வேந்தன், கன்னியாகுமரி - பசிலியான் நசரேத், விளவங்கோடு இடைத்தேர்தல் - ராணி ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சிம்லா முத்துச்சோழனுக்கு சீட்

திமுகவில் இருந்து விலகி அண்மையில் அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச் சோழனுக்கு அதிமுகவில் லோக்சபா தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்கே நகரில் போட்டியிட்டவர். திமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைந்துக் கொண்டார். அவருக்கு இப்போது சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர, தூத்துக்குடி சிட்டிங் எம்பி கனிமொழியை எதிர்த்து சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். நெல்லையில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அதிமுகவின் சிம்லா முத்துச் சோழன் போட்டியிட இருக்கிறார். 

அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்

1. வடசென்னை - ராயபுரம் மனோ, 2. தென்சென்னை - ஜெயவர்தன், 3. காஞ்சிபுரம் (தனி) - ராஜசேகர், 4. அரக்கோணம் - ஏ.எல்.விஜயன், 5. கிருஷ்ணகிரி - ஜெயப்பிரகாஷ், 6. ஆரணி - கஜேந்திரன், 7. விழுப்புரம் - பாக்கியராஜ், 8. சேலம் - விக்னேஷ், 9. நாமக்கல் - தமிழ்மணி, 10. ஈரோடு - ஆற்றல் அசோக்குமார், 11. கரூர் - தங்கவேல், 12. சிதம்பரம் (தனி) - சந்திரகாசன், 13. நாகப்பட்டினம் (தனி) - சுர்சித் சங்கர், 14. மதுரை - சரவணன், 15. தேனி - நாராயணசாமி, 16. ராமநாதபுரம் - ஜெயபெருமாள். 

மேலும் படிக்க | ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவுமே செய்யாத ஒரே முதல்வர் எடப்பாடி: கனிமொழி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News