மக்களவை தேர்தல் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்றப்படும் மக்களவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை!!

Last Updated : Mar 28, 2019, 05:06 PM IST
மக்களவை தேர்தல் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு!! title=

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்றப்படும் மக்களவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை!!

தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மக்களவை தேர்தலையும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்க தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ளார். அதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்படும் எனவும், விலைவாசி உயர்வை பொறுத்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் 33% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவை விட 50% அதிக தொகையில் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்றப்படும் என சிபிஎம் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

> பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்கள் இயற்றப்படும். மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்

> தனியார் காப்பீடு நிறுவன சிகிச்சை முறை நிறுத்தப்பட்டு, சுகாதாரத்திற்கு ஜிடிபியில் 5% ஒதுக்கப்படும். அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வேலை என்பது அடிப்படை உரிமையாக்கப்படும். 

> இந்திய அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்பு வலுப்படுத்தப்படும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு சலுகைகளை வெளியிட்டுள்ளனர். 

 

Trending News