Lok Sabha Elections: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புரட்சி பாரதம் கட்சிக்கு திருவள்ளுர் அல்லது விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புரட்சி பாரதம் கட்சிக்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட தொகுதிகள் ஏதும் ஒதுக்கப்படவில்லை. இதனால் புரட்சி பாரதம் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
மேலும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பது குறித்து இரண்டு நாட்களில் தெரிவிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜெகன் மூர்த்தி தெரிவித்திருந்தார். இது அதிமுக -வுக்கு ஒரு நெருடலாக இருந்து வந்தது. தேர்தல் பிரச்சாரம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டத்திலும் புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் பூந்தமல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி பேசுகையில், தங்களுக்கு நாடாளுமன்ற தொகுதியில் இடம் ஒதுக்காத நிலையில் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததாகவும், அதில் 90 சதவிதம் தொண்டர்கள் அதிமுகவுடன் பயணிக்கலாம் என கூறியதாகவும் கூறினார். இதனையடுத்து தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், அதிமுகவின் முக்கிய தலைவர்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள் என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் வாய்ப்பு அளிப்பதாக உறுதியளித்தனர் என்றும், அதன் காரணமாக தற்போது ஆதரவு தாங்கள் அதிமுக -வுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | பாஜக ஆட்சியின் நோக்கம் ஏழைகள் பிச்சைக்காரர்களாக வேண்டும் - திருச்சி சிவா!
அவர் பேசியபோது, “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற அதிமுகவினருடன் இணைந்து புரட்சி பாரதம் கட்சியை நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். அதிமுக கூட்டணி மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு உந்து சக்தியாக பாடுபடுவோம். இன்னும் மூன்று நாட்களில் அதிமுக பொதுச் செயலாளர் திருவள்ளூர் பகுதிக்கு பிரச்சாரத்திற்கு வர உள்ளனர். புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அதிமுக கூட்டணியில் தொடர்கிறோம். அதிமுக கூட்டணியில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட்டு கிடைக்காததால் கோபத்தில் இருந்து வந்தோம். நாங்கள் உடனடியாக தனித்து நின்று போட்டியிட கால அவகாசம் இல்லை. ஆரம்பத்திலேயே எங்களுக்கு சீட்டு இல்லை என்று கூறி இருந்தால் தனித்து போட்டியிட தயாராகி இருப்போம். இன்று முதல் புரட்சி பாரதம் கட்சியினர் அதிமுகவினருடன் இணைந்து தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி தொண்டர் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது” என தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ