“அன்பும் அமைதியும் மிக்க வாழ்வு அனைவருக்கும் அமையட்டும்!” -MKS

கிறிஸ்துமஸ் திருநாளில் அன்பும் அமைதியும் மிக்க வாழ்வு அனைவருக்கும் அமையட்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Last Updated : Dec 24, 2019, 02:39 PM IST
“அன்பும் அமைதியும் மிக்க வாழ்வு அனைவருக்கும் அமையட்டும்!” -MKS title=

கிறிஸ்துமஸ் திருநாளில் அன்பும் அமைதியும் மிக்க வாழ்வு அனைவருக்கும் அமையட்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., "உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ மக்களால் உணர்வுடனும் உற்சாகப் பெருக்குடனும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருவிழா கருணை மிக்க தியாக வாழ்வைக் கொண்ட இயேசுநாதரின் பிறப்பினைக் குறிப்பதாகும். பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தாமல், பிறர் தவறுகளையும் தன் மீது சுமந்துகொண்ட பெருமகனாக இயேசுநாதரின் வாழ்க்கை அமைந்திருந்ததை வரலாற்றில் காண்கிறோம்.

அன்பும் அமைதியும் மிக்க வாழ்க்கை அனைவருக்கும் வாய்த்திட வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் திருவிழாவின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேறிட, தி.மு.கழகம் என்றும் கிறிஸ்தவ சமுதாய மக்களுக்குத் துணை நிற்கும் என்ற உறுதியுடன் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் விழா நாளை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், குழந்தை இயேசு பிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் விண்மீன்ஆலயம், பேராலயம் மற்றும் வளாகப் பகுதிகளில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து வருகின்றன. மேலும் விண்மீன் கோயிலினுள் பிரமாண்ட இயேசு கிறஸ்து பிறப்புகுடில் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் கலை கட்டி வருகிறது.

விண்மீன் கோயிலில் இன்று இரவு 11.30 மணி முதல் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக வேளாங்கண்ணியில் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பதற்காக வேளாங்கண்ணிக்கு லட்சகணக்கானோர் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. அதேபோல் போக்குவரத்துதுறை சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இனிதே அமைய வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையல் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் கிஸ்துமஸ் பண்டிகையினை இனிதே அனைவரும் கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News