மேகதாது அணை: மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2018, 03:26 PM IST
மேகதாது அணை: மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு!  title=

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு! 

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே அணைகட்டித் தண்ணீரைக் குடிநீருக்காக எடுக்கவும், நானூறு மெகாவாட் நீர்மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தக் கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

ஆனாலும் அணை கட்டும் இடம், செலவு, அணையின் அளவுகள், நிலவியல், நீரியல் கூறுகள் ஆகியவை அடங்கிய வரைவு அறிக்கையைக் கர்நாடக அரசு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில் இந்த வரைவு அறிக்கைக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

திட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்த நிலையில், இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க நீதிமன்றம் செல்கிறது தமிழக அரசு. மேலும், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

 

Trending News