MGR Central-Tirupati உட்பட பல தனியார் ரயில் தடங்களுக்கு Southern Railways பரிந்துரை!!

மண்டல தலைமையகத்திலிருந்து ஆந்திராவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதிக்கும், எர்ணாகுளத்திலிருந்து கொச்சுவேலிக்கும் வாராந்திர ரயில்களை இயக்க இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 22, 2020, 11:42 AM IST
  • தெற்கு ரயில்வே முன்னர் பரிந்துரைத்த 14 ரயில் வழித்தடங்களுக்கு கூடுதலாக இரண்டு புதிய தனியார் ரயில் பாதைகளை பரிந்துரைத்துள்ளது.
  • திருப்பதிக்கு போகும் ரயிலில் அரக்கோணம் மற்றும் ரெனிகுண்டாவில் நிறுத்தங்கள்.
  • ஏப்ரல் 2023 க்குள் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
MGR Central-Tirupati உட்பட பல தனியார் ரயில் தடங்களுக்கு Southern Railways பரிந்துரை!! title=

சென்னை: தெற்கு ரயில்வே முன்னர் பரிந்துரைத்த 14 ரயில் வழித்தடங்களுக்கு கூடுதலாக இரண்டு புதிய தனியார் ரயில் பாதைகளை பரிந்துரைத்துள்ளது. சென்னை - திருப்பதி (Chennai-Tirupati) மற்றும் எர்ணாகுளம் -கொச்சுவேலி (Ernakulam-Kochuveli) ஆகிய வழித்தடங்களில் புதிய தனியார் ரயில் சேவையை இந்த மண்டலம் முன்மொழிந்துள்ளது.

தெற்கு ரயில்வே (Southern Railway) தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் (CPTM) ரயில்வே வாரியத்திற்கு (RB) இது குறித்து கடிதம் எழுதியுள்ளார். மண்டல தலைமையகத்திலிருந்து ஆந்திராவின் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதிக்கும், எர்ணாகுளத்திலிருந்து கொச்சுவேலிக்கும் வாராந்திர ரயில்களை இயக்க இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

CPTM-ன் செப்டம்பர் 15 கடிதத்தில், திருப்பதிக்கு போகும் ரயிலில் அரக்கோணம் மற்றும் ரெனிகுண்டாவில் நிறுத்தங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் எர்ணாகுலத்திலிருந்து புறப்படும் ரயிலுக்கும் கொல்லம் மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ALSO READ:உலகின் முதல் சிறப்பு சுரங்கப்பாதையை உருவாக்கிய இந்தியன் ரயில்வே..

CPTM –ன் இந்த பரிந்துரைகளை உறுதிப்படுத்திய மூத்த ரயில் அதிகாரி ஒருவர், ரயில்வே வாரியத்தின் (Railway Board) அறிவுறுத்தலின் அடிப்படையில் இரண்டு ரயில் வழித்தடங்களும் தனியார் நடவடிக்கைகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று கூறினார்.

14 வழித்தடங்களில் ஒன்றான சென்னை-லோக்மண்ய திலக் தனியார் ரயில் தடம், சேவை இல்லாத நாட்களில் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும். எனவே, இந்த நேரத்தில், சென்னை மற்றும் திருப்பதி இடையே மற்றொரு குறுகிய தூர சேவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது.

சென்னை-லோக்மண்ய திலக்-சென்னை தனியார் ரயிலின் ஓட்டத்தைக் கருத்தில் கொண்டு, எம்.ஜி.ஆர் சென்னை மத்திய நிலையத்திலிருந்து (MGR Chennai Central) திருப்பதி செல்லும் தனியார் ரயில், இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு திருப்பதியை அடையலாம் என்று Southern Railway பரிந்துரைத்துள்ளது.  திரும்பும் போது, திருப்பதியில் காலை 9.40 மணிக்கு ரயிலை எடுத்து, மதியம் 12.50 மணிக்கு செண்டிரல் ஸ்டேஷனை அடைய Southern Railways அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

“வாரியத்தின் அறிவுறுத்தலின் படி நாங்கள் பாதைகளை அடையாளம் கண்டுள்ளோம். இந்த திட்டங்கள் தற்போதைக்கு துவக்க கட்டத்திலேயே உள்ளன” என்று Southern Railway-ன் ஒரு அதிகாரி கூறினார். ஏப்ரல் 2023 க்குள் ரயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: IRCTC ePayLater: பணம் இல்லாமலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News