இது மந்திரிக்கு அழகு அல்ல - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

பொன்னை ஆற்றில் குப்பை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேசி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jan 22, 2024, 01:29 PM IST
  • உண்மைக்கு புறம்பான செய்திகள் கூறக்கூடாது.
  • நிர்மலா சீதாராமனுக்கு துரைமுருகன் எச்சரிக்கை.
  • காட்பாடியில் இது குறித்து பேசி உள்ளார்.
இது மந்திரிக்கு அழகு அல்ல - அமைச்சர் துரைமுருகன் பேட்டி! title=

இன்று கோவில்களில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான செய்தி, மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேசியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பேருந்து நிலையத்தில் பொன்னையிலிருந்து சென்னை வரை செல்லும் புதிய பேருந்து இயக்க துவக்க நிகழ்ச்சி வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பேருந்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். 

மேலும் படிக்க | ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் நித்தியானந்தா! அவரே வெளியிட்ட பதிவு!

இதில் காட்பாடி ஒன்றிய பெருங்குழு தலைவர் வேல்முருகன், உள்ளிட்ட திமுகவினர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்பு இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, பொன்னை ஆற்றில் இருந்து சுகாதார முறையில் தண்ணீர் கொடுக்க நான் முயற்சி செய்து வருகின்றேன், நான் தண்ணீர் கொடுக்கும் ஆற்றில் குப்பைகள் கொட்டி வருகிறீர்கள்.  இது என் கவனத்திற்கு வந்துள்ளது நீர்நிலைகள் மற்றும் ஆறுகளில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், காலாவதியான கல்குவாரியை நடத்திக் கொண்டிருப்பவர்கள்  யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக தமிழகம் முழுவதும் கணக்கெடுத்துக் கொண்டுள்ளோம். 

இன்று ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டுள்ளது. தமிழகத்தில் கோவில்களில் பூஜை செய்ய தமிழக அரசும் திமுகவும் தடை விதித்துள்ளதாக மத்திய அமைச்சர் குற்றம் சாட்டி உள்ளது குறித்த கேள்விக்கு, மத்திய அமைச்சர் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறான செய்திகளை கூறக்கூடாது இது மந்திரிக்கு அழகு அல்ல என்று கூறினார். தடுப்பணைகளுக்கான டெண்டர் முடிந்து விட்டது. விரைவில் பணிகள் துவங்கப்படும் மேலரசம்பட்டு தடுப்பணை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஆய்வு முடிந்து அறிக்கை வந்தவுடன் அந்தப் பணிகளும் துவங்கும் என்று கூறினார்.  பொன்னை பேரூராட்சியாக உருவாக்கப்படுமா என்ற கேள்விக்கு, விரைவில் பொன்னை பேரூராட்சியாக உருவாக்கப்படும் இது என் கவனத்தில் உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: இந்தியாவில் நடக்கும் முக்கிய மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News