ஸ்ரீபெரும்புதூர் SIPCOT தொழிற்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளில் அமைச்சர்கள் ஆய்வு

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயின் தாக்கம் அதிகரித்து, வீரியம் குறையாத நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 11, 2021, 07:28 AM IST
  • ஸ்ரீபெரும்புதூர் SIPCOT தொழிற்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளில் அமைச்சர்கள் ஆய்வு
  • தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
  • ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில் தங்கு தடையின்றி உற்பத்தி, விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும்
ஸ்ரீபெரும்புதூர் SIPCOT தொழிற்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளில் அமைச்சர்கள் ஆய்வு title=

உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயின் தாக்கம் அதிகரித்து, வீரியம் குறையாத நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளன.

தமிழகத்தில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு மாநில அரசு  பல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு படியாக, தமிழகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்தும் உரிய முறையில் இயங்குகிறதா என்று கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

Also Read | ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட 250 பேர் மீது வழக்குப்பதிவு! காரணம்?

அதன் தொடர்ச்சியாக, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டையில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
 
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வரும் தனியார் தொழிற்சாலைகளான   ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட் (Inox Air Products) மற்றும் ப்ராக்ஸ் ஏர் (Praxair) ஆகிய தனியார் தொழில்சாலைகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

Also Read | தவறு செய்தால் பதவி நீக்கம்: தமிழக அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில் தங்கு தடையின்றி உற்பத்தி, விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொழிற்சாலை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட் தொழிற்சாலையில் தினசரி 160 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, உற்பத்தி அளவு 20 மெட்ரிக் டன் அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.  

அதேபோல் நாளொன்றுக்கு 80 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ப்ராக்ஸ் ஏர்நிறுவன தொழிற்சாலையில் உற்பத்தி அளவை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ளுமாறு அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.  

Also Read | தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன் சப்ளை செய்ய உடனடி நடவடிக்கை வேண்டும்- ஐகோர்ட்!

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அண்டை மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் ஆக்சிஜன் இருப்பு குறைந்துவிடாமல் இருப்பதை தொடர்ந்து கண்காணிக்கிறோம் என்று அமைச்சர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அமைந்துள்ள பெல் தொழிற்சாலை (Bell factory) உள்ளிட்ட ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வாய்ப்புகள் இருந்தால், உடனடியாக அந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சாத்தியக்கூறுகள் உள்ள நிறுவனங்களில் எல்லாம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தேவையான அறிவுறுத்தல்கள்  வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.  

அமைச்சர்கள் தனியார் ஆலைகளில் ஆய்வுகளை மேற்கொண்டபோது  சிப்காட் மேலாண்மை இயக்குநர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலர் தெ.சண்முகப்பிரியா, ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மா.நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Also Read | இன்றைய ராசிபலன், 11 மே 2021: குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், சுபச்செய்திகள் கிடைக்கும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News