‘சட்டப்பேரவையில் என் உரைகள் நறுக்கப்படுகிறது’ - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

சட்டமன்றத்தில் பேசும் எனது உரைகள் நறுக்கப்படுகிறது- கோவையில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு.  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 1, 2022, 06:04 PM IST
  • ‘தமிழக சட்டபேரவையில் எங்களது கருத்துகளை முழுமையாக தெரிவிக்க முடிவதில்லை’
  • எனது பேச்சுக்களை நறுக்கிவிடுகிறார்கள் - வானதி ஸ்ரீனிவாசன்
  • ‘அமைச்சர்களின் பேச்சுகள் மட்டும் முழுமையாக வருகிறது’
‘சட்டப்பேரவையில் என் உரைகள் நறுக்கப்படுகிறது’ - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு  title=

கோவை லட்சுமி மில் அருகே உள்ள தனியார் பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். இந்த முகாமில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் பேசியதாவது,  ‘அனைவருக்கும் மே தின வாழ்த்துகள். பொதுவாழ்க்கையில் ஈடுபடும் ஊடக நண்பர்களாகிய உங்களின் உழைப்பும் மகத்தானதுதான். அதனால் அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துகள். 

மேலும் படிக்க | வானதி ஸ்ரீனிவாசனுக்கு கோவை எம்.பியின் 5 கேள்விகள்.!

கோவை தெற்கு தொகுதியில் ஒவ்வொரு பகுதிக்கும்  இலவச மருத்துவ முகாமை நடத்த திட்டமிட்டுள்ளேன். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கு எந்தவித சங்கடங்கள் வரக் கூடாது என்பதில் சபாநாயகர் தெளிவாக இருக்கிறார். எங்களால் முழுமையாக கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு இல்லாமல் போகிறது. நாங்கள் பேசும் உரைகள் நேரலையில் முழுமையாக வருவதில்லை. அதுகுறித்துக் கேட்டால் தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். எனது பேச்சுக்களை நறுக்கிப் போடுகிறார்கள். ஆனால், அமைச்சர்கள் பேசுவது மட்டும் முழுவதும் வருகிறது. எங்களது பேச்சுகளும் முழுமையாக வீடியோவாக வெளிவர வேண்டும். இதில், ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று பார்க்கக் கூடாது. குறிப்பாக, சபைக்குறிப்பில் நீக்கம் தொடர்பான கருத்துகளை விட்டுவிட்டு அனைத்தும் ஒளிப்பரப்ப வேண்டும். இலங்கைப் பிரச்சனையை பொறுத்தவரை, தமிழக அரசு உதவ வேண்டும் என்று நினைப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அதே வேலையில்  முள்ளிவாய்க்களில் நடந்த சம்பவம்களுக்கு யார் காரணம் என்றும், அன்று நடந்த உயிரிழப்பு சம்பவங்களையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.  கோவையில் தொழில் முனையும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், ஒவ்வொரு பெண் தொழில் முனைவோர்களையும் தமிழக அரசு ஊக்குவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | Viral Video : உட்கட்சி பூசலில் பாஜக பிரமுகர் மீது பாஜகவினரே கொலைவெறி தாக்குதல்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News