பொது குழுவிற்கு தடை இல்லை: நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம்

அதிமுக பொதுக்குழுவை நடத்த தடை இல்லை என்று நீதிமன்றம் ஓபிஎஸ் கொடுத்த தடைக்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 11, 2022, 10:21 AM IST
  • அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்து தீர்மானம்
  • 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தீர்மானம்
  • கட்சியின் கலர் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட இருக்கிறது
பொது குழுவிற்கு தடை இல்லை: நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் முழு விவரம் title=

பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்து சென்னை உயர்நீதி மன்றம் தீர்வு வழங்கி உள்ளது.  கட்சி உள் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.  காலை 9.15க்கு பொதுக்குழு நடைபெற இருந்த நிலையில் 9 மணிக்கு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது நீதிமன்றம்.  இன்று இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி, ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பமே மேலோங்கி இருக்கும் எனவும், பொதுக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள 2,665 பேரில் 2,100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட விருப்பம் தெரிவித்துள்ளதால் பொதுக்குழுவை கூட்டலாம் என அனுமதியளித்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | அதிமுக அலுவலகத்தில் தொடர்ந்து பதற்றம்! கற்களை வீசி தாக்குதல்!

அரசியல் கட்சிகளின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், கட்சி விதிகளின்படியும் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் எனவும், விதிமீறல்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் உத்தரவிட்டு, பன்னீர்செல்வம் மனுவை தள்ளுபடி செய்தார்.  

eps

இன்று நடைபெற்று வரும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.  அதில் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து செய்து பொதுக்குழுவில் தீர்மானம்.  பொதுக்குழுவில் ஓபிஎஸ் தனி இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் பங்கேற்கவில்லை.  பொதுக்குழு நடைபெற்று வரும் சமயத்தில் அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது.

மேலும் படிக்க | தொடரும் வருமான வரி துறை சோதனை! மீண்டும் சிக்கிய எஸ்பி வேலுமணி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News