தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 13,967 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8795 ஆக உயர்வு..!

Last Updated : May 21, 2020, 07:35 PM IST
தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 13,967 ஆக உயர்வு! title=

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8795 ஆக உயர்வு..!

தமிழகத்தில் இன்று மேலும் 776 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்வு. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... மாநிலத்தில் இன்று புதிதாக 776 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 13,967 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 400 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 6282 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 567 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8795 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 42 பேரும், செங்கல்பட்டில் 34 பேரும், தூத்துக்குடியில் 22 பேரும் (இதில் 17 பேர் மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள்), மதுரையில் 19 பேரும் (இதில் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 16 பேர், டில்லியில் இருந்து வந்த ஒருவரும் அடங்கும்), காஞ்சிபுரத்தில் 13 பேரும் இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

District
Confirmed
 
Active
Recovered
Deceased
Chennai

567
8,801
5,685
225
3,048

7
68
Chengalpattu

34
651
415
40
233
3
Thiruvallur

42
636
414
24
215
7
Cuddalore

1
421
19
20
401
1
Ariyalur
355 7
3
348
0
Viluppuram

4
323
27
16
294
2
Tirunelveli

11
254
165
10
88
1
Kancheepuram

13
233
103
5
129
1
Madurai

19
191
80
1
109
2
Tiruvannamalai

5
170
108
12
62
0
Coimbatore
145 0 144 1
Perambalur
139 26
22
113
0
Thoothukkudi

22
134
103 29 2
Dindigul

5
132
25 106 1
Kallakurichi

8
120
62 58 0
Tiruppur
114 0 114 0
Theni

4
96
51 44 1
Ranipet

4
88
28
2
60
0
Tenkasi

8
83
33
2
50
0
Karur

1
80
25
3
55
0
Thanjavur

4
80
14 66 0
Namakkal
77 0 77 0
Erode
70 0 69 1
Virudhunagar

8
69
29
3
40
0
Tiruchirappalli
68 2 66 0
Airport Quarantine

7
61
61 0 0
Nagapattinam
51 6 45 0
Kanyakumari
49 25
3
23
1
Salem
49 14 35 0
Ramanathapuram
39 17 21 1
Vellore

1
36
7
2
28
1
Thiruvarur
32 0
2
32
0
Tirupathur

1
30
4
4
26
0
Sivaganga

2
28
15 13 0
Krishnagiri
21 3 18 0
Pudukkottai

3
16
9
1
7
0
Nilgiris
14 2 12 0
Railway Quarantine

2
5
5 0 0
Dharmapuri
5 1 4 0
Other State
1 0 0 1

தமிழகத்தில் தற்போது குணமடைந்தவர்கள் விகிதம் 44.97 ஆக உள்ளது. மாநிலத்தில் பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இதுவரை 3.72 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. தமிழகத்தில் முதலில் நெகட்டிவ் ஆகி வீட்டிற்கு சென்ற 25 பேருக்கு கொரோனா வந்துள்ளது புதிய சவாலாக உள்ளது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து பாசிட்டிவாக வருவோரும் சவாலாக உள்ளனர். இந்த புதிய சவால்களால் தான் தற்போதைய அதிக பாதிப்பு எண்ணிக்கைக்கு காரணம். 

Trending News