ஆப்ரேஷன் காவேரி... தயார் நிலையில் தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

CM Stalin On Operation Kaveri: சூடானில்‌ சிக்கித்‌ தவிக்கும்‌ தமிழர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும்‌ "ஆபரேஷன்‌ காவேரி" மீட்புப்‌ பணிக்கு, தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்க தயார் நிலையில் இருப்பதாக பிரதமருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Apr 26, 2023, 02:55 PM IST
  • சூடானில் 400 தமிழர்கள் சிக்கித் தவிப்பு.
  • மீட்புப் பணியில் இந்திய விமானங்கள், கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
ஆப்ரேஷன் காவேரி... தயார் நிலையில் தமிழ்நாடு - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி! title=

CM Stalin On Operation Kaveri: சூடானில்‌ உள்நாட்டுப்‌ போர்‌ காரணமாக நிலவிவரும்‌ சிக்கலான நிலை காரணமாக அங்கு சிக்கித்‌ தவிக்கும்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த சுமார்‌ 400 பேர்‌ உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும்‌ "ஆபரேஷன்‌ காவேரி" மீட்புப்‌ பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும்‌ ஒத்துழைப்பு வழங்கிடத்‌ தயார்‌ நிலையில்‌ இருப்பதாக பிரதமர்‌ நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ இன்று (ஏப். 26) கடிதம்‌ எழுதியுள்ளார்‌.

அக்கடிதத்தில்‌, சூடானில்‌ உள்நாட்டு போர்‌ காரணமாக நிலவிய சிக்கலான நிலை தற்போது முன்னேற்றமடைந்து வரும்‌ நிலையில்‌, இந்திய குடிமக்களை சூடானில்‌ இருந்து விரைவாக வெளியேறுவதற்கு வசதியாக இந்திய விமானப்படை விமானம்‌ மற்றும்‌ இந்திய கடற்படை கப்பல்கள்‌ சூடான்‌ அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது ஆறுதலளிப்பதாகத்‌ முதலமைச்சர் ஸ்டாலின் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  

மேலும் படிக்க | ஆபரேஷன் காவிரி... முதல் கட்டமாக சூடான் துறைமுகம் வந்தடைந்த 500 இந்தியர்கள்!

400 தமிழர்கள்

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார்‌ 400 பேர்‌ வரை சூடானில்‌ சிக்கித்‌ தவித்து வருதாகவும்,‌ அவர்கள்‌
இந்தியாவுக்குத்‌ திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பது குறித்து பிரதமரின்‌ கவனத்திற்குத்‌ தாம்‌ கொண்டுவர விரும்புவதாகவும்‌ குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, சூடானில்‌ சிக்கித்‌ தவிக்கும்‌ இந்தியர்களின்‌ முதல்‌ தொகுதி ஐ.என்‌.எஸ்‌ சுமேதா என்ற கப்பலில்‌ இருக்கும்‌ நிலையில், அவர்களின்‌ உறவினர்களிடம் இருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள்‌ வந்துகொண்டிருப்பதாகவும்‌ அவரது கடிதத்தில்‌ முதலமைச்சர்‌ தெரிவித்துள்ளார்‌.

மேலும்‌ இது தொடர்பாக, தமிழ்நாட்டைச்‌ சேர்ந்தவர்களைக்‌ குறித்த தகவல்களைப்‌ பெறுவதற்கும்‌, அங்கு சிக்கித்‌ தவிக்கும்‌ தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும்‌ அனைத்து உதவிகளையும்‌ வழங்கவும்‌, வெளியுறவுத்‌ துறை அமைச்சகம்‌ மற்றும்‌ சூடானில்‌ உள்ள இந்தியத்‌ தூதரகத்துடன்‌ இணைந்து செயல்படவும்‌ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும்‌ அவரது கடிதத்தில் முதலமைச்சர்‌ தெரிவித்துள்ளார்‌.

உறுதியளித்த முதல்வர்

"ஆபரேஷன்‌ காவேரி" மீட்புப்‌ பணியானது, சூடானில்‌ சிக்கித்‌ தவிக்கும்‌ தங்கள்‌ உற்றார்‌ உறவினர்களின்‌ பாதுகாப்பாகத்‌ திரும்புவதற்காகக்‌ காத்திருக்கும்‌ அனைத்து இந்தியர்களின்‌ குடும்பங்களுக்கும்‌ அமைதியையும்‌ மகிழ்ச்சியையும்‌ கொண்டுவரும்‌ என தாம்‌ நம்புவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சூடானில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும்‌ முயற்சிகளுக்கு தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ ஒத்துழைப்பு வழங்கத்‌ தயார்‌ நிலையில்‌ இருப்பதாக மீண்டும்‌ அவரது கடிதத்தில் முதலமைச்சர்‌ உறுதிப்படுத்தியுள்ளார்‌.

மேலும் படிக்க | சூடானில் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர தயாராக உள்ள C-130J ராணுவ விமானங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News