குழந்தைகளுக்கு வாங்கிய கேக்கில் ஹான்ஸ் போதைப் பொருள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர்

குழந்தைகளுக்கு வாங்கிய கேக்கின் நடுவே இருந்த ஹான்ஸ் போதைப்பொருளைக் கண்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2022, 06:02 PM IST
  • சதீஷ் தனது குழந்தைகளுக்காக ஒரு பேக்கரியில் இரண்டு சாக்லேட் கேக்குகளை வாங்கியுள்ளார்.
  • கேக்கின் நடுவே தடை செய்யப்பட்ட போதைப்பொருளான ஹான்ஸ் பாக்கெட் இருந்துள்ளது.
  • பேக்கரி கடைகளில் உணவு பொருட்கள் தரமாக விற்கப்படுகிறதா என ஆய்வுகளை மேற்கொள்ள கோரிக்கை.
குழந்தைகளுக்கு வாங்கிய கேக்கில் ஹான்ஸ் போதைப் பொருள்; அதிர்ச்சி அடைந்த பெற்றோர் title=

வீட்டில் சாப்பிடுவதற்காக வாங்கி சென்ற சாக்லேட் கேக்கின் நடுவே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான ஹான்ஸ் பாக்கெட் இருந்தது குழந்தைகள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஓசூர் அருகேயுள்ள பாகலூர் ஏ.கே காலனியை சேர்ந்தவர் சதீஷ் (32) இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சதீஷ் தனது குழந்தைகளுக்காக பாகலூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் இரண்டு சாக்லேட் கேக்குகளை 50 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற அவர் குழந்தைகளுக்கு அந்த கேக்குகளை கொடுத்து சாப்பிட வைத்துள்ளார்.

அப்போது ஒரு கேக்கின் நடுவே தடை செய்யப்பட்ட போதைப்பொருளான ஹான்ஸ் பாக்கெட் (சைனி ஹைனி) இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தைகளும் பெற்றோரும் அந்த கேக்கை சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டனர். இதனையடுத்து சதீஷ் அந்த கேக்கை தான் வாங்கிய பேக்கரிக்கு கொண்டு சென்று இந்த கேக்கில் ஹான்ஸ் போதை பொருள் இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் பேக்கரியில் இருந்தவர்களோ அவர் கூறியதை கண்டு கொள்ளவே இல்லை, இதனால் மேலும் அதிர்ச்சியடைந்த அவர் என்ன செய்வது என்று செய்வதறியாது திகைத்துள்ளார்.

மேலும் படிக்க | தடயத்தை அழிக்க திருடன் செய்த காரியத்தை பாருங்கள் -சிசிடிவி காட்சி

வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹான்ஸ் போதைப்பொருளுடன் அந்த சாக்லேட் கேக்கை ஒரு வேளை அந்த குழந்தைகள் சாப்பிட்டு இருந்தால் மயக்க நிலைக்கு சென்று இருக்கும். மேலும் அந்த குழந்தைகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கும் ஆளாகி இருக்கும், எனவே உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த பேக்கரி கடை மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; ஓசூர் பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் உணவு பொருட்கள் தரமாக விற்கப்படுகிறதா என ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

பாகலூரில் உள்ள இந்த கடைக்கு முன்பு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. அங்குள்ள மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இதுபோன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும் உணவுகளை பேக்கரியில் வாங்கி சாப்பிடுவதன் மூலம் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் எனவே இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க: இந்தியாவையே நடுநடுங்க வைத்த தக்கர் கொள்ளையர்கள்.! வரலாற்றின் பின்னணி

மேலும் படிக்க: சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News