அதிமுக அல்லது திமுக: எந்த கூட்டணியில் பாமக? அன்புமணி ராமதாஸ் போடும் கணக்கு

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, இந்த முறை அந்த கூட்டணிக்குள் செல்லலாமா? வேண்டாமா? என்ற யோசனையில் இருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 3, 2023, 03:00 PM IST
  • நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்
  • திமுக பக்கம் சாய விரும்பும் பாமக
  • திமுக எடுத்திருக்கும் நிலைப்பாடு என்ன?
அதிமுக அல்லது திமுக: எந்த கூட்டணியில் பாமக? அன்புமணி ராமதாஸ் போடும் கணக்கு title=

திமுக கூட்டணி 

பிரதமரை தேர்வு செய்யும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை அனைத்து கட்சிகளும் இப்போது தொடங்கிவிட்டன. அண்மையில் திமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், 40 தொகுதிகளையும் வெற்றிபெற கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் தேர்தல் பணியாற்ற தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதற்கேற்ப திமுக தனது கட்சி பணிகளையும் உறுப்பினர் சேர்க்கையையும் முடுக்கிவிட்டுள்ளது. இப்போதைய சூழலில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற அனைத்து கட்சிகளும் அப்படியே இடம்பெறுவதற்கு வாய்ப்புகளே அதிகம்.

பாமக நிலைப்பாடு

ஆனால், கடந்த முறை பாஜக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு, இந்தமுறை அந்த கூட்டணியில் இடம்பெறுவதற்கு தயக்கம் இருக்கிறது. அதிமுக - பாஜக எடுக்கும் கையில் எடுக்கும் பிரச்சனைகளுக்கு எந்த ஆதரவையும் தெரிவிக்காமல் இருக்கும் பாமக, திமுக அரசின் செயல்பாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு சந்தர்ப்பங்களில் பாராட்ட தவறவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸே பாராட்டினார். செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தியதற்கும், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை நிறைவேற்று ஆளுநரின் ஒப்புதல் பெற்றது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு வெளிப்படையாக பாராட்டு தெரிவித்தார்.

மேலும் படிக்க | அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட டி.ஆர். பாலு... 8ஆம் தேதி கிரிமினல் வழக்கு!

கூட்டணிக்கான சமிக்கை 

சட்டப்பேரவையில் ஜி.கே மணி பேசும்போது முதலமைச்சரையும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் திமுகவினருக்கு நிகராக புகழ்ந்து பேசினார். அவர்களின் நடவடிக்கைகளுக்கு தன்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்தார். இவையெல்லாம் திமுகவுக்கு பாமக கொடுக்கும் அரசியல் சமிக்கைகளே என அரசியல் தளத்தில் பேச்சு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தாங்கள் வர தயாராகவே இருக்கிறோம் என்பதை மறைமுகமாக தெரிவிக்கும் விதமாக பாமகவின் செயல்பாடுகள் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

திமுகவுக்கு தலைவலி 

இதனை கவனித்துக் கொண்டிருக்கும் திமுக தலைமை, பாமகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறது. காங்கிரஸூக்கு ஒதுக்கப்படும் சீட்டுகள் குறையும் என்பதை தவிர பாமக கூட்டணிக்குள் வருவதால் திமுகவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பாமக திமுக கூட்டணிக்குள் வந்தால், நிச்சயம் நாங்கள் இங்கே இருக்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துவிட்டார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன். தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனும் இப்போது திமுக கூட்டணியில் தான் இருக்கிறார். அவருக்கும் இதில் உடன்பாடு இருக்காது என கூறப்படுகிறது. இது தான் திமுகவுக்கு இருக்கும் சிக்கல். இருந்தாலும் தேர்தல் நெருங்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறது திமுக

அதிமுக போடும் கணக்கு

ஆனால் அதிமுக, கடந்த முறைபோல் அமைத்த அதே கூட்டணியை அமைக்க முடிவில் இருக்கிறது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி திமுகவை வலிமையாக எதிர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியும் அதற்கேற்ப அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்துள்ளார். சீட் பேரத்தில் மட்டும் தான் அதிமுக - பாஜக இடையே இப்போது இருக்கும் பெரிய பிரச்சனை. இதனை சரிகட்ட தீவிர ஆலோசனையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, பாமக அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டும் என விரும்புகிறார். 

அன்புமணி ராமதாஸ் முடிவு

ஆனால், அன்புமணி ராமதாஸூக்கு திமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதாம். அதற்காகவே அரசியல் ரீதியாக கடுமையான குற்றச்சாட்டுகள் எதையும் திமுக மீது வைக்கமால் இருக்கும் அவர், திமுகவிடம் இருந்து வரும் சிக்னலை பொறுத்து அடுத்தகட்ட முன்னெடுப்புகளை எடுக்கலாம் என இருக்கிறாராம். அதுவரை பாமகவின் அடிப்படை கட்டமைப்புகளை வலுவப்படுத்துவதிலும், கட்சி தொண்டர்களை உயிர்ப்புடன் வைக்கும் வேலைகளிலும் கவனம் செலுத்தலாம் என முடிவெடுத்திருக்கிறாராம். 

மேலும் படிக்க | பிடிஆர் -ஐ மட்டும் பாஜக டார்கெட் செய்வது ஏன்? ஆடியோ விவகாரத்தில் இருந்து எப்போது மீள்வார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News