லைக்கிற்காக சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர், வீடியோக்களை நீக்கிய காவல்துறை

இருசக்கர வாகன சாகசம் மற்றும் ரேசில் ஈடுபடுவோரை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதுவரை 37-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 6, 2022, 01:47 PM IST
  • இருசக்கர வாகன சாகசம்
  • 37-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது கைது
லைக்கிற்காக சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர், வீடியோக்களை நீக்கிய காவல்துறை title=

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசம் மற்றும் ரேசில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்கள் சிறார்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்திருந்தது. 

இருசக்கர வாகன சாகசம் மற்றும் ரேசில் ஈடுபடுவோரை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதன் அடிப்படையில் இதுவரை 37-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | 'நான் ஓல்டு மேன் இல்லடா.... போல்டு மேன்' பைக்கில் மாஸ் காட்டும் தூள் தாத்தா!!

அந்த வகையில் சென்னை கோயம்பேடு 100 அடி சாலை நெசப்பாக்கம் புதிய மேம்பாலத்தில் இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதுடன் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட நபரின் வாகன எண் மற்றும் அடையாளங்களை வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த நபர் பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் உசேன் (19) என்பது தெரியவந்தது. அதனடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சாகசத்தில் ஈடுபட பயன்படுத்திய அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆஷிக் உசேன் சென்னையின் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சாகசங்களை நிகழ்த்தி அதை லைக்குகாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றி வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து ஆஷிக் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்த அனைத்து சாகச வீடியோக்களையும் நீக்கியது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆஷிக் உசேனின்  போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | Bike Stunt செய்த இரு பெண்களின் வீடியோ வைரல், 28,000 ரூபாய் அபராதம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News