Pongal 2023: இந்த நேரத்துல பொங்கபானை வெச்சா, உங்க வாழ்க்கைக்கு சூரியன் கேரண்டி

Happy Pongal 2023: 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற கூற்றுக்கு ஏற்ப, தை மாதப்பிறப்பு நம்பிக்கையையும், நல்ல எண்ணங்களையும், நேர்மறை சிந்தனைகளையும், உழைப்புக்கான உந்துதலையும் தன்னுடம் கொண்டு வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 14, 2023, 10:48 AM IST
  • ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.
  • பொங்கல் பொங்கி வரும் அந்த தருணத்தில் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் 'பொங்கலோ பொங்கல்' என உற்சாகக் குரல் எழுப்பும்போம்.
  • அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அன்பு, ஆரோக்கியம், பாசம், செல்வம், செழிப்பு என அனைத்தும் பொங்கும்.
Pongal 2023: இந்த நேரத்துல பொங்கபானை வெச்சா, உங்க வாழ்க்கைக்கு சூரியன் கேரண்டி title=

Happy Pongal 2023: தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை கொண்டாட உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பொங்கலுக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. தேவையற்ற பழையவற்றை களைந்து புதியவற்றுக்கு நம் வாழ்வில் இடம் கொடுக்க வேண்டும் என்பதை இந்த பண்டிகை எடுத்துக்கூறுகின்றது. தமிழ்நாட்டில் நாம் பல வித விழாக்களை, பண்டிகைகளை கொண்டாடுகிறோம். எனினும், நம் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாக இருப்பது தைப்பொங்கல் பண்டிகை. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கான, விவசாயிகளுக்கான, விவசாயத்துக்கு உதவும், கதிரவன், பூமி, விலங்குகள், இவற்றுக்கான பண்டிகையாகும்.

பொங்கலோ பொங்கல்

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்து, மஞ்சள் கொத்து கட்டிய புதுப் பானையிலிட்டு, புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் உன்னதமான விழாவாகும் தைப்பொங்கல் திருவிழா. 

பொங்கல் பொங்கி வரும் அந்த தருணத்தில் அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் 'பொங்கலோ பொங்கல்' என உற்சாகக் குரல் எழுப்பும்போது, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, அன்பு, ஆரோக்கியம், பாசம், செல்வம், செழிப்பு என அனைத்தும் பொங்கும்.

மேலும் படிக்க | உழவர் திருநாளுக்கு உழவர் சந்தையை நோக்கி படையெடுக்கள் பொதுமக்கள் 

புது நம்பிக்கை

'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற கூற்றுக்கு ஏற்ப, தை மாதப்பிறப்பு நம்பிக்கையையும், நல்ல எண்ணங்களையும், நேர்மறை சிந்தனைகளையும், உழைப்புக்கான உந்துதலையும் தன்னுடம் கொண்டு வருகின்றது. 

பொங்கல் வைக்கும் நேரம்

வழக்கமாக, மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறக்கும் அந்த தருணத்தில் பொங்கல் பானை வைத்து பொங்கல் செய்து, அது பொங்கி வரும்போது 'பொங்கலோ பொங்கல்' என கூறி, இறைவனுக்கு பொங்கலுடன் பிற பண்டங்களையும், கரும்பு, வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை படைப்போம், ஆனால், இந்த ஆண்டு, உத்தராயன புண்ய காலம், அதாவது தை மாதம் 14 ஆம் தேதி, இன்று இரவே பிறந்துவிடுகிறது. ஆகையால் ஞாயிறு காலை நல்ல நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.

பொங்கல் வைக்க மிகவும் நல்ல நேரம் காலை 7.40 மணி முதல் 9.40 மணியாகும். இந்த நேரத்தில் அமோகமான ராஜயோகம் அமைவதோடு, சுக்கிர மற்றும் புதன் ஓரையும் உள்ளன. இந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்டால், சூரியன் அதிகப்படியான மகிழ்ச்சியை அடைந்து உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு, கல்வி, நிம்மதி என அனைத்தையும் தந்து அருளுவார்.

மேலும் படிக்க | Happy Pongal 2023: பொங்கல் பண்டிகை அன்று இந்த உணவுகளை ட்ரை பண்ணி பாருங்கள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News