Punjab Bathinda Firing: பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில், 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது.
இரண்டு ராணுவ அதிகாரிகள் படை முகாமுக்குள் சென்று பார்த்தபோது, சாகர் பன்னே (25), யோகேஷ் குமார் ஜே (24) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். மற்றொரு அறையில், சந்தோஷ் எம் நகரால் (25), கமலேஷ் ஆர் (24) ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்த நால்வரின் இருவர் தமிழ்நாட்டையும், மற்ற இருவர் கர்நாடகாவையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. உயிரிழந்த யோகேஷ் குமார் ஜே தேனி மாவட்டத்தையும், கமலேஷ் ஆர் சேலம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இவர்களின் உடல் நாளை (ஏப். 14) சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்படும் என தகவல் அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க | பஞ்சாப் படிண்டாவில் ராணுவ முகாம் மீது துப்பாக்கிச்சூடு! 4 பேர் பலி!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் யோகேஷ்குமார் (24). தனது 19 வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்த தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
உயிரிழந்த யோகேஷ்குமார்
நேற்று அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இவர் உள்பட 4பேர் பலியானார். இதனை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்வதற்காக இன்று அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா அரசு சார்பில் மரியாதை செலுத்த உள்ளார்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்கும், விசாரணை குழுவுக்குத் தலைமை தாங்கும் பதிண்டா காவல் கண்காணிப்பாளர் அஜய் காந்தி கூறுகையில், "வெள்ளை குர்தா-பைஜாமா அணிந்திருந்த அடையாளம் தெரியாத இருவர், முகம் மற்றும் தலையை மூடிய நிலையில், துப்பாக்கிச் சூடு முடிந்து படைமுகாமில் இருந்து வெளியே வருவதை ஒரு ஜவான் பார்த்துள்ளார். அவர்களில் ஒருவர் INSAS துப்பாக்கியையும், மற்றொன்று கோடரியையும் ஏந்தியிருந்ததாக என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.
நடுத்தர உயரம் கொண்டதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல் நடத்திய இருவர், ராணுவ வீரரை கண்டதும் படைமுகாமிற்கு அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கி தப்பி ஓடினர். பின்னர் அவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனதாகக் கூறப்படும் 28 ரவுண்டுகள் தோட்டாக்கள் மற்றும் INSAS துப்பாக்கியின் தொடர்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கண்டறியப்பட்டு வருவதாக அது மேலும் கூறினார்.
மேலும் படிக்க | கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் அரசியலில் இருந்து விலகும் பாஜக மூத்த தலைவர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ