ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. அதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்து அதற்குத் தீர்வு காண்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்குப் பொதுமக்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் கட்சியினரும் வந்து நின்றனர். இந்து தேசிய கட்சி சார்பாக வந்த அக்கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க வந்தனர்.
மனு அளிக்க வந்தவர்கள் ’வேண்டும் வேண்டும் ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வேண்டும்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தி வந்தது எல்லோரையும் ஒருகணம் அங்கேயே நின்று பார்க்க வைத்தது. பதாகைகளோடு மட்டும் விட்டுவிடாமல் அதே வாசகத்தை கோஷங்களாக எழுப்பினர். இது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரிகள் என எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
மேலும் படிக்க | நிச்சயம் இவர்தான் இந்திய அணியின் எதிர்காலம்! கவாஸ்கர் கூறிய வீரர்!
இதற்கிடையே, மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை உறுதி செய்ததை போன்று வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழை ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத்தை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் படிக்க | ஈ.சி.ஆரில் நடந்த மதுவிருந்து... ஆட்டம் பாட்டம் ; போலீஸ் வந்ததும் அப்படியே ஓட்டம்..!
மேலும், இலவச பேருந்து பயணத்தில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடின்றி உண்மையான சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர். பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்த வேண்டும் என சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், இந்து தேசிய கட்சி சார்பில் பெண்களுக்கு இணையாக பேருந்து பயணத்தில் ஆண்களுக்கும் இலவச பயணம் அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருப்பது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு பெண்களை போன்று ஆண்களுக்கும் பேருந்துகளில் இலவச பயணத்திற்கு அனுமதி அளிக்கப்படுமா ? அப்படி நிகழ்ந்தால் அதில் என்ன மாதிரியான விளைவுகளை அரசு சந்திக்க நேரிடும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR