தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் விறுவிறுப்பு!!

சூலூர் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!!

Last Updated : May 19, 2019, 11:45 AM IST
தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் விறுவிறுப்பு!! title=

சூலூர் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!!

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகள் அழிக்கப்படவில்லை. பாப்பிரெட்டிப்பட்டியில் வாக்காளர்களை, வாக்குச்சாவடி முகவர்கள், வாக்கு எந்திரம் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கே அழைத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கடலூர் பன்ருட்டி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய இடங்களில், மொத்தம் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட அந்த வாக்குச்சாவடிகளில், 4 மறுவாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கத் தகுதியான வாக்காளர்கள், தங்களது வாக்கினைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சூலூர் தொகுதிக்குட்பட்ட எலச்சிபாளையம் 37வது வாக்குச்சாவடி மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த அரைமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒட்டநத்தம் பகுதி வாக்குசாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. 

ஒட்டநத்தம் பகுதி வாக்குசாவடியில் பழுதான வாக்கு இயந்திரம் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதேபோல் சூலூர் தொகுதியில் எலச்சிபாளையம் 37-வது வாக்குச்சாவடியில் மின்னணு இயந்திரம் பழுதானதால் 30 நிமிடங்களுக்கு மேல் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

Trending News