மலேசியாவுக்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

மலேசியாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 28, 2022, 08:44 PM IST
  • செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • மலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த செம்மரக்கட்டைகள்
  • 12 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்
மலேசியாவுக்கு கடத்தவிருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல் title=

தூத்துக்குடி துறைமுகம் வழியாக மலேசியாவுக்கு கடத்தி செல்வதற்காக செம்மரக்கட்டைகள் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பெங்களூரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையெடுத்து, திருப்பூரில் இருந்து மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கடந்த 26ஆம் தேதி கொண்டுவரப்பட்ட இரும்பு குழாய்கள் இருந்த சரக்குப் பெட்டகத்தை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

Red Sandal Wood

சோதனையின்போது, சரக்குப் பெட்டகத்தில் இருந்த 9 பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் மேல் பகுதியில் இரும்பு குழாய்களும், அடிப்பகுதியில் கருப்பு பிளாஸ்டிக் சுற்றப்பட்ட செம்மரக்கட்டைகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சரக்குப் பெட்டகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 டன் செம்மரக்கட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 12 கோடி வரை இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர். 

Red Sandal Wood

இந்தச் சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் உள்ளிட்ட இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கூறினர்.

மேலும் படிக்க | 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News