தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்திவருகின்றன. சமீபத்தில்கூட தமிழ்நாடு முழுவதும் பாஜக தனது கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அந்தவரிசையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான அதிமுக இன்று மின் கட்டண உயர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். மதுரை முனிச்சாலையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு திமுகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் படிக்க | மின்கட்டண உயர்வு: அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேலிக்கூத்தாக உள்ளது. இந்தியாவிலேயே சட்ட ஒழுங்கு மோசமான மாநிலம் என்று சர்வே சொல்கிறது. இது வேதனையாக உள்ளது. நீட் தேர்வு ரத்து, 7 பேர் விடுதலை வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆச்சு?
லெஜண்ட் சரவணா போல கோட் போட்டுக்கொண்டு நடந்து வந்து செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார். ஆனால், அதில் செஸ் சாம்பியன்களை காணவில்லை. சீன அதிபர் உடனான சந்திப்பின்போது வேஷ்டி கட்டிக்கொண்டு வந்த மோடிதான் உண்மையான தமிழர்.ஸ்டாலின் தன்னை தமிழர் என சொல்லி ஏமாற்றி கொண்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளிக்கு சம்பந்தம் இல்லை என்றார் டிஜிபி. மறுநாள் மூன்று பேரை கைது செய்தார்கள். அதிமுக ஆட்சியில் அனிதா இறந்தபோது அவ்வளவு விமர்சனம் செய்து போராடியவர்கள், இப்போது எங்கே போனார்கள்? திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் யாரையுமே காணவில்லை.
மேலும் படிக்க | திருவள்ளுவர் மாணவி தற்கொலை - பள்ளி வளாகத்திற்குள் வைத்தே ஆசிரியைகளிடம் விசாரணை
தமிழகத்தில் திமுகவுக்கு அடுத்த நாங்கள்தான் என சிலர் (பாஜக) சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதை பொய்யாக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் ஒரே எதிர்கட்சி அதிமுகதான். மக்கள் கடனில் தவிக்கும் போது, கடலில் பேனா எதற்கு?” என கேள்வி எழுப்பினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ