Veda Nilayam: வேதா நிலையம் அதிமுகவின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி

வேதா நிலையம்  விவகாரத்தில் அதிமுகவுக்கு தோல்வி! மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி... பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை என குட்டு வைத்தது நீதிமன்றம்

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jan 5, 2022, 11:42 AM IST
  • வேதா நிலையம் வாரிசுகளுக்கே!
  • மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி
  • நிலம் கையகப்படுத்துதலில் நடைமுறை தவறுகள் இருந்தது
Veda Nilayam: வேதா நிலையம் அதிமுகவின் மேல்முறையீடு வழக்கு தள்ளுபடி title=

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், நிலம் கையகப்படுத்திய உத்தரவுகளை தனி நீதிபதி ரத்து செய்ததை எதிர்த்து, அதிமுக மற்றும் முன்னாள் அமைச்சர்சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப் அமர்வு, வேதா நிலையம் என்ற தனியார் இடமான கையகப்படுத்தியதில் விதிமீறல் உள்ளது என கூறும் அதிமுக, தனி நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கில் இணையவில்லை என்பதை சுட்டிக்காட்டியது.

மேலும், நிலம் கையகப்படுத்துதலில் நடைமுறை தவறுகள் இருந்ததாக குறிப்பிட்ட நீதிமன்ற அமர்வு, பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது எனவே இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியது.

முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் வேதா நிலையம் (Poes Garden Veda Illam) இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்ற முடிவு செய்த அதிமுக அரசு, அதை கையகப்படுத்தி, அரசுடமையாக்கி உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. மேலும், வேதா நிலையம் இல்லத்துக்கான இழப்பீட்டுத்தொகையும் நீதிமன்றத்தில் அரசு சார்பில் செலுத்தப்பட்டது.

ALSO READ | ஜெயலலிதா நினைவு இல்ல விவகாரம் - அதிமுக உயர்நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில்,  ஜெயலலிதாவின் வாரிசுதாரர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால், வேதா இல்லத்தின் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக சார்பில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

புகழ்பெற்ற தலைவர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்றுவது புதிதல்ல என்பதை சுட்டிக் காட்டிய அவர், வேதா நிலையத்தை கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து மாநில அரசு (Tamil Nadu Government), மேல்முறையீடு  செய்ய அக்கறை காட்டாததால், அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் தான் மேல் முறையீடு செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ | காவல்துறையினரிடமே பிக்பாக்கெட் அடித்த சமூகவிரோதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News