அம்மாவின் ஆன்மா சாந்தியடைய 5 ரூபாயில் அறுசுவை உணவு வழங்கும் மகன்

Just Rs 5 For Arusuvai Unavu: நான் என் தாயை நினைத்து 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி அவர்களின் பசியை போக்குகிறேன், எனக்கு பிறகு என் மகள், பேரன், பேத்தி இந்த செயலை முன்னெடுத்து செல்வார்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 8, 2022, 08:39 AM IST
  • எனக்கு பிறகு என் மகள், பேரன், பேத்தி இந்த செயலை முன்னெடுத்து செல்வார்கள்.
  • 5 ரூபாயில் சாம்பார், கூட்டு, அப்பளம், ரசம் உட்பட அறுசுவை உணவு.
  • 200 முதல் 300க்கும் மேற்பட்டோரின் பசியினை போக்கி வருகின்றனர்.
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய 5 ரூபாயில் அறுசுவை உணவு வழங்கும் மகன் title=

வைரல் நியூஸ்: அம்மா என்றால் யாருக்குத்தான் பிடிக்காது நாய், பூனைக்க கூடத்தான் பிடிக்கும் என்ற சினிமாவில் சொல்வதை போல நிஜத்தில்  இறந்த போன அம்மாவின் ஆன்மா தினந்தோறும் சாந்தியடைய 5 ரூபாயில் அறுசுவை உணவளித்து வருகிறார் தாய் மீது பேரன்பு கொண்ட சரஸ்வதி பெற்ற மகன்.

வாருங்கள்.. அவரை பற்றித்தெரிந்துக் கொள்ளுவோம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் குணசேகரன் என்பவர் ஆணையப்பர் உலகம் என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். இவரின் தாய் சரஸ்வதி அம்மாள் சமீபத்தில் இறந்து விட தாயாரின் சரஸ்வதி அம்மாவின் நினைவாக மதியம் 200 முதல் 300க்கும் மேற்பட்டோருக்கு 5 ரூபாயில் சாம்பார், கூட்டு, அப்பளம், ரசம் உட்பட அறுசுவை உணவு அளித்து அசத்தி வருகிறார். 

இந்த ஓட்டலில் மதிய நேரங்களில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் என 200 முதல் 300க்கும் மேற்பட்டோர் மதிய உணவினை மனதார சாப்பிட்டு மதிய பசியினை போக்கி வருகின்றனர்.

Unlimited Arusuvai Unavu

மேலும் படிக்க: தொடக்கப்பள்ளி மாணவர்களின் அவலநிலை; 15 ஆண்டுகளாக மதிய உணவு கிடைக்கவில்லை

இதுபற்றி குணசேகரன் கூறியது:
பிறப்பு, இறப்பு மனிதனுக்கு இரண்டுமே பொதுவான விஷயம் பிறக்கும் போது ஒன்னும் கொண்டு வருவதும் இல்லை. இறக்கும் போதும் ஒன்னு கொண்டு போறதில்லை.. ஆனா இருக்கிறவரைக்கும் ஏதோ ஒன்னு பொதுமக்களுக்கு பண்ணனும் அதனால தான்  நான் என் தாயை நினைத்து 5 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி அவர்களின் பசியை போக்குகிறேன், எனக்கு பிறகு என் மகள், பேரன், பேத்தி இந்த செயலை முன்னெடுத்து செல்வார்கள். அதுவே எங்களுக்கு முழுமையான சந்தோசம் மனநிறைவு என மகிழ்ச்சியோடு பேசி நெகிழ்ச்சிய வெளிப்படுத்தினர் ஆணையப்பர் ஹோட்டலின் தம்பதியர்.

மேலும் படிக்க: என்ன கொடும சார் இது: வகுப்பறையிலே சரக்கடித்த மாணவிகள், இணையத்தில் வீடியோ வைரல்

மேலும் தற்போது சூழலில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வு என பல்வேறு பொருளாதார விளைவுகள் சந்தித்தாலும் அதனை பொருட்படுத்தமால், தனது தாயார் சரஸ்வதி நினைவாக இந்த பகுதியில் செயல்பட்டுவரும் இவரது உணவகம் பல்வேறு தரப்பிலும் இருந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவி; அசத்திய சென்னை போலீஸ்

Unlimited Food for poor people

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News