நாமக்கல் வழியாக மாற்றி விடப்படும் தெற்கு மண்டல ரயில்கள்!

வரும் மார்ச் மாதத்திலிருந்து, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில், ராமேஸ்வரம் – ஓக்கா வாராந்திர விரைவு ரயில்கள் நாமக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

Last Updated : Feb 25, 2018, 09:33 PM IST
நாமக்கல் வழியாக மாற்றி விடப்படும் தெற்கு மண்டல ரயில்கள்! title=

வரும் மார்ச் மாதத்திலிருந்து, சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில், ராமேஸ்வரம் – ஓக்கா வாராந்திர விரைவு ரயில்கள் நாமக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!

வெள்ளிக் கிழமை தோறும் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் ரயில் மற்றும் ஞாயிறுதோறும் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாரம் ஒருமுறை விரைவு ரயில்கள் வரும் மார்ச் மாதத்தில் இருந்து நாமக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இந்த ரயில் தற்போது சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல் வழியாகச் சுற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த ரயில்கள் வரும் மார்ச் 9-ஆம் தேதியில் இருந்து சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதேபோல் தற்போது திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்பட்டு வரும் ராமேஸ்வரம் – ஓக்கா வராந்திர விரைவு ரயிலும் மார்ச் 6-ஆம் தேதி முதல் திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Trending News