தமிழகம் முழுவதும் 6 IPS அதிகாரிகள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
நெல்லை முழுவதும் கண்காணிப்பு கேமராவின்கீழ் கொண்டுவருவேன் என பேட்டி அளித்த நிலையில் பாஸ்கரன் IPS அவர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
மாற்றப்பட்ட அதிகாரிகளும் அவர்கள் தற்போது வகித்துவரும் பதவி விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- நெல்லை காவல் ஆணையராகப் பதவி வகிக்கும் என்.பாஸ்கரன் சென்னை செயலாக்கப்பிரிவு IG-யாக மாற்றப்பட்டுள்ளார்.
- படிப்புக்காக விடுப்பில் சென்று பணிக்குத் திரும்பியுள்ள தீபக்.எம்.தாமோர் நெல்லை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
- சமூக நலன் மற்றும் மனித உரிமை ஆணைய உதவித் தலைவர்(AIG) பணியில் இருந்த ரங்கராஜன் மாற்றப்பட்டு சென்னை CBCID-3 SP-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை CBCID-3 SP நிஷா பார்த்திபன் பெரம்பலூர் மாவட்ட SP-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெரம்பலூர் மாவட்ட SP திஷா மிட்டல் திருப்பூர் மாவட்ட SP-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- திருப்பூர் மாவட்ட SP கயல்விழி உளுந்தூர்பேட்டை, தமிழ்நாடு சிறப்புக்காவற்படை 10-வது பட்டாலியன் கமாண்டண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் சமீபத்தில் நெல்லையில் நடந்த முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவர் கொலை வழக்கில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகள் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார். நெல்லை காவல்துறையை நவீனமாக்கும் முயற்சியில் போக்குவரத்து காவல்துறைக்கு நவீன கருவிகளை அறிமுகப்படுத்தினார். இதனிடையே நேற்று செய்தியாளர் சந்திப்பில் நெல்லை முழுவதும் 1,027 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் விரைவில் 10,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஸ்கரன் திடீரென சென்னை செயலாக்கப்பிரிவு IG-யாக மாற்றப்பட்டுள்ளார்.