உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி Salem 8 Way Road திட்டத்தை தொடரலாம்: SC அதிரடி

உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி, சென்னை சேலம் எட்டு வழி சாலை திட்டத்தை தொடரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 8, 2020, 03:00 PM IST
  • 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான சென்னை-சேலம் எட்டு வழி பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.
  • திருவண்ணாமலை, சேலம் உட்பட ஐந்து மாவட்டங்களில் வழியாக அமைய உள்ள 277.30 கிலோமீட்டர் நெடுஞ்சாலை திட்டம்.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு எதிரான அனைத்து மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி.
உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றி Salem 8 Way Road திட்டத்தை தொடரலாம்: SC அதிரடி title=

புது டெல்லி: சென்னை-சேலம் 8 வழிச்சாலையைத் திட்டத்தை தொடரலாம். இந்த திட்டத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தும் போது உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக்கூறி, உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி, சென்னை சேலம் எட்டு (Chennai-Salem Expressway) வழி சாலை திட்டத்தை தொடரலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதாவது சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் (Chennai High Court) அளித்தத் தீர்ப்பு செல்லாது என்றும், அத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த தடையில்லை என்றும்  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. அதேநேரத்தில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் செயலாப்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

சென்னை-சேலம் எட்டு வழி பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு பிப்ரவரி 2018 இல் ஒப்புதல் கிடைத்தாலும், எதிர்ப்புக்கள் மற்றும் சட்டப் போராட்டங்கள் காரணமாக, இந்த திட்டம் செயல்படுதுவதில் தாமதங்கள் ஏற்பட்டது.

ALSO READ | PMK கோரிக்கை: ஏமாற்றமளிக்கும் SC தீர்ப்பு, 8 வழிச்சாலைத் திட்டத்தை கைவிடவேண்டும்

திருவண்ணாமலை, சேலம் (Salam) உட்பட ஐந்து மாவட்டங்களில் வழியாக அமைய உள்ள 277.30 கிலோமீட்டர் நெடுஞ்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் இயற்கை வளங்களுக்கு ஆபத்து உள்ளது என அவர்கள் குற்றம் சாட்டினார்.

சென்னை-சேலம் எட்டு வழி சாலைத் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னை-சேலம் 8 வழிச்சாலையைத் திட்டத்திற்கு தடை விதித்தது. அதன் பிறகு இந்த தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசும் இந்திய நெடுஞ்சாலை துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

ALSO READ | 8 வழி சாலை வழக்கு: நிலம் கையகப்படுத்தியது செல்லாது - HC அதிரடி!!

உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்பொழுது, நிலம் கையகப்படுத்த சென்னை நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லும் என்றும், அதேநேரத்தில் சென்னை-சேலம் எட்டு வழி (Salem 8 Way Road) சாலைத் திட்டத்திற்கு தடை இல்லை என்றும், புதிதாக அரசாணை வெளியிட வேண்டும் என்றும், சட்டத்துக்கு உட்பட்டு, திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு எதிரான அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News