என் கனவு நமது கோவை .... அண்ணாமலை அளித்த 100 வாக்குறுதிகள்!

K Annamalai Election Promises: கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறி கோவை தொகுதிக்கென தேர்தல் அறிக்கையை வெளியிட்டாட். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 12, 2024, 07:02 PM IST
  • தேசிய புலனாய்வு, போதை தடுப்பு மையத்தை கோவையில் நிறுவுவோம்.
  • தமிழகத்தில் இரண்டாவது ஐஐஎம் கோவையில் நிறுவப்படும்.
  • 6 சட்டமன்ற அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறக்கப்படும்.
என் கனவு நமது கோவை .... அண்ணாமலை அளித்த 100 வாக்குறுதிகள்!  title=

Lok Sabha Election 2024 Manifesto: 18வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தேர்த களம் சூடுபிடித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டத்தில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளதால், தமிழ்நாடு பரபரப்பாக உள்ளது. வரும் ஜூன் 4 ஆம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். 

"என் கனவு நமது கோவை" -அண்ணாமலை 

தமிழ்நாட்டை பொறுத்த வரை, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதற்கிடையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டார். அதாவது "என் கனவு நமது கோவை" என்ற தலைப்பில் கோவை மாவட்டத்திற்கான 100 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அண்ணாமலை வெளியிட்டார். 

தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சாா்பில் கணபதி ப.ராஜ்குமாா், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் கே. அண்ணாமலை, நாம் தமிழா் கட்சி சார்பில் கலாமணி ஜெகந்நாதன் உள்ளிட்டோா் போட்டியிடுகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க - 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர்... நாடு முழுவதும் உரிமைத்தொகை - திமுக தேர்தல் அறிக்கை

அண்ணாமலை வெளியிட்ட வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள்

-- 6 சட்டமன்ற அலுவலகத்தில் பாராளுமன்ற தேர்தல் அலுவலகம் திறக்கப்படும்.

-- கோவையின் நீர் வளத்தை மேம்படுத்துவோம்.

-- தேசிய புலனாய்வு, போதை தடுப்பு மையத்தை கோவையில் நிறுவுவோம்

-- கோவை விமான நிலையத்தை சர்வதேச விமான முனையமாக மேம்படுத்தப்படும்.

-- கோவை தொகுதிக்கென்று தனி ரயில்வே கோட்டம் கொண்டு வரப்ப்படும்.

-- கோயம்புத்தூரில் புறநகர் ரயில் சேவை கொண்டுவரப்படும்.

-- கோவை மெட்ரோ திட்டப்பணிகள் முழுவதுமாக முடிக்கப்படும்.

-- தமிழகத்தில் இரண்டாவது ஐஐஎம் கோவையில் நிறுவப்படும்.

-- கோவையில் சர்வதேச தரத்தில் அருங்காட்சியகம்.

-- மத்திய அரசின் நவோத பள்ளிகள் அமைப்போம்.

-- ஸ்போர்ட்ஸ் கிளை பயிற்சி மையம் அமைப்போம்

-- விசைத்தறி உரிமையாளர்களுக்காக பவர் டெக்ஸ் திட்டம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

-- தேசிய முதியோர் நல மருத்துவ மையம் நிறுவ நடவடிக்கை எடுப்போம்

-- உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் நிறுவுவோம்

-- 24 மணி நேர உணவு கொடுப்பதற்கு, தனியார் பங்களிப்புடன் ஷூட் பேங் நிருவுவோம்.

-- கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

-- கோவையில் உலக தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை.

-- காமராஜர் நினைவு கூறும் வகையில், கோவை மாநகரில் 3 உணவகம் நிறுவப்படும்.

-- 5 ஆண்டுகள் முடியும் போது இன்டர்நேஷனல் மேப்பில் கோவை இருக்கும்.

மேலும் படிக்க - A டூ Z.. கொடி பறக்குது! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பட்டியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News