தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!!
தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாதது, தலைநகரில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மழையே பெய்யாமலிருந்தது ஆகிய காரணங்களால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும், கடுங்கோடையில் நீர் நிலைகளும் வற்றியுள்ளதால், நிலத்தடி நீரை பெருமளவு சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய கிணறுகளில் நீர் எடுத்து விநியோகிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், மாற்றுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் குறிப்பாக சென்னையின் குடிநீர் பிரச்சனையை போக்க போர்க்கால அடிப்படையில் தீர்க்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.
#Chennai: Tamil Nadu CM Edappadi K.Palanisamy holds high-level meeting with state ministers and officials over water crisis in the state. pic.twitter.com/CinVoZkfch
— ANI (@ANI) June 21, 2019
தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்றனர். இதில், நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம், ஏரி குளங்களை தூர் வாரும் பணியை தீவிரப்படுத்துவது, மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் தர முன் வந்ததாகவும், அதை தமிழக அரசு மறுத்துவிட்டதாகவும் நேற்று கேரள முதல்வரின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
சென்னைஅதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக மறுப்பு தெரிவித்து அறிக்கை கொடுத்துவிட்டது. இருந்த போதிலும் தினமும் கேரளாவில் இருந்து ரயில் மூலம் நீர் பெறுவது குறித்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளன.