கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவனுக்கு உணவில் விஷம் கலந்த மனைவி

குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையில், அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில் மோகன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாயினர். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 11, 2021, 10:01 AM IST
கள்ளக் காதலுக்கு தடையாக இருந்த கணவனுக்கு உணவில் விஷம் கலந்த மனைவி

சென்னை சூளைமேடு பகுதியில், வசித்து வந்த செல்வம்- விஜயலட்சுமி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். திடீர்ரென்று செல்வம் மரணமடைந்தார். அதிக மது பழக்கம் காரணமாக இறந்து விட்டதாக மனவி கூறினார். ஆனால், பிரேத பரிசோதனையில், உணவில் விஷம் வைத்து கொல்லப்பட்டது தெரிய வந்ததது. எனவே சந்தேகம் வலுத்து விசாரணை நடத்தியதில்  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையில், அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில் மோகன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாயினர். 

இது கணவருக்கு தெரிந்ததும் அவர் மிகக் கடுமையாக கண்டித்ததோடு, மோகனுடன் உல்லாசமாக இருக்க முடியாதபடி தடையாக குறுக்கே நின்றிருக்கிறார். இதனால் மோகனும் விஜயலட்சுமியும், தங்களது கள்ளக் காதலுக்கு தடையாக இருக்கும் செல்வத்தை கொலை செய்துவிட முடிவு செய்தனர். இதனால்,  செல்வம் சாப்பிட்ட உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்திருக்கிறார் விஜயலட்சுமி.

 சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்த செல்வம்,  உடனேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், மது அதிகம் குடித்ததால் இறந்து விட்டதாக கூறி  அழுதிருக்கிறார் விஜயலட்சுமி. ஆனாலும் செல்வத்தின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர் போலீசில் புகார் அளித்தனர்.

 புகாரின் பேரில் காவல் துறையினர் செல்வத்தின் மரணம் குறித்து விசாரித்து வந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவின் மூலம் உணவில் விஷம் வைத்து  கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று தெரியவந்தது.

இது தெரிந்து, விஜயலட்சுமி தனது குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டு மோகனுடன் தலைமறைவாகி விட்டார் . இதனால், சந்தேகம் வலுத்ததாக மேலும் விசாரனை நடத்தியதில், விஜயலட்சுமி தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.  மேலும் கள்ளக்காதலன் மோகன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கொடூர குற்றவாளி என்பதும் அவர் மீது 7 கொலை வழக்குகள் 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்றும் தெரியவந்திருக்கிறது. குற்றவாளிகள் இருவரையும் போலீஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

More Stories

Trending News