தமிழகத்தில் அச்சத்தின் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு: இன்று 20,000-ஐ நெருங்கியது எண்ணிக்கை

மாநில சுகாதாரத் துறை செய்தி அறிக்கையின் படி, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,17,405 ஆக உள்ளது. இன்று 17,164 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,54,746 ஆக உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 1, 2021, 10:34 PM IST
  • சனிக்கிழமை 1,45,731 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • சனிக்கிழமை தமிழகத்தில் 19,588 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • மாநில சுகாதாரத் துறை செய்தி அறிக்கையின் படி, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,17,405 ஆக உள்ளது.
தமிழகத்தில் அச்சத்தின் உச்சம் தொடும் கொரோனா பாதிப்பு: இன்று 20,000-ஐ நெருங்கியது எண்ணிக்கை title=

சென்னை: கொரோனா தொற்று இந்தியாவை தன் பிடியில் சிக்கவைத்துள்ளது. இந்தியாவின் பல இடங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. 

சனிக்கிழமை தமிழகத்தில் 19,588 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்ட 147 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,86,344 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 14,193 ஆகவும் உயர்ந்துள்ளது.

வெள்ளிக்கிழமை தமிழகத்தில் (Tamil Nadu) 18,692 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர், 113 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாநில சுகாதாரத் துறை செய்தி அறிக்கையின் படி, சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,17,405 ஆக உள்ளது. இன்று 17,164 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,54,746 ஆக உள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 5829 பேர் தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர், 47 பேர் இறந்தனர். 31,475 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். செங்கல்பட்டு, கோயம்பத்தூர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் முறையே 1445, 1257 மற்றும் 779 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் வசிப்பவர்கள் பலர் மருத்துவமனைகள் நிரம்பியிருப்பதாகவும், சிகிச்சைக்கு அங்கு போதுமான படுக்கைகள் கிடைக்கவில்லை என்றும் கூறினர். பலர் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று நீண்ட நேரம் காத்திருந்து, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டனர்.

ALSO READ: COVID Cases Spike: இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் கோவிட் பாதிப்பு

ஓமந்தூர் ஜிஹெச்சிலும் பல நோயாளிகளுக்கு இடம் கிடைக்கவில்லை. அங்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் பல கோவிட் -19 நோயாளிகள் அனுமதி பெற ஆம்புலன்சில் காத்திருந்தனர்.

சனிக்கிழமையன்று கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களில், 114 பேருக்கு பிற உடல் பிரச்சனைகளும் இருந்தன. 33 பேர் இறப்புக்கு கொரோனா முழுமையான காரணமாக இருந்தது. 

திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயது இளைஞரும் இன்று இறந்தவர்களில் ஒருவராவார். கோவிட் -19 ஆல் தூண்டப்பட்ட நிமோனியாவால் அவர் இறந்தார்.

இதேபோல், திருவள்ளூரைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரும் ஏப்ரல் 29 அன்று கோவிட் நோயால் உந்தப்பட்ட நிமோனியாவால் இறந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே அவர் உயிர் பிரிந்தது. உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சில நாட்களிலேயே நிமோனியா வந்து இறப்பது அச்சத்தை அதிகப்படுத்துகிறது. 

இதற்கிடையில், சனிக்கிழமை 1,45,731 பேருக்கு கொரோனா பரிசோதனை (Corona Testing) மேற்கொள்ளப்பட்டது. இதனுடன் மொத்தமாக நடத்தப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 2,24,24,611 ஆக உள்ளது.

ALSO READ: விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா: அமைச்சகம் பிறப்பித்த அவசர உத்தரவு இதோ

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News