மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நடைபெற்றது. இதில் மு.க.அழகிரி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். திமுகவில் இருந்து அழகிரி விலகி இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் அவரை பார்த்ததும் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அவரை சூழ்ந்து கொண்டு வணக்கம் தெரிவித்தனர். அதோடு தங்கம் தென்னரசு, ஆவடி நாசர் ஆகிய அமைச்சர்கள் அவரை கார் ஏற்றி வழி அனுப்பி வைத்தனர். மு.க.அழகிரி தனது மனைவி காந்தி, மகன் துரை தயாநிதியுடன் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டார்.
மேலும் படிக்க | இனி குடும்பத் தலைவிகளின் பெயரில்தான் வீடுகள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள் நித்திலாவுக்கும் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரனின் மகன் கீர்த்தனுக்கும் சென்னையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது.
தங்கபாண்டியனின் நெருங்கிய நண்பரான அழகிரி இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்த மு.க.அழகிரியை மற்ற திமுக நிர்வாகிகளும் மகிழ்ச்சியுடன் வரவேற்று பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு கிளம்ப தனது காரை நோக்கி நடந்தவரை வெளியே சென்று அமைச்சர் ஆவடி நாசர் வழி அனுப்பிவைத்தார்.
மேலும் படிக்க | அடுத்தடுத்து வரும் அணைப் பிரச்சினைகள்: என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?
அழகிரியுடன் பல திமுக நிர்வாகிகளும் ஆர்வத்துடன் செல்பி எடுத்திக்கொண்டனர். இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.கனிமொழியும் கலந்துகொண்டார்.
நேற்று மாலை வரவேற்பு நிகழ்ச்சியில் மு.க.அழகிரி கலந்து கொண்ட நிலையில், இன்று காலை திருமண நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இருவரின் மீட்டிங் மட்டும் மிஸ் ஆனது தான் வருத்தமாக உள்ளதாக திமுக நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR