தமிழக வெற்றிக் கழகம்: குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவக்கம்

தமிழக வெற்றிக் கழக கிழக்கு ஒன்றியம் சார்பில் மாகறல் கிராமத்தில் ஓரு வருடத்திற்கு வாரந்தோறும் ஒருநாள் விலையில்லா ரொட்டி, பால், முட்டை, பழம் வழங்கும் விழாவினை மாவட்ட தலைவர் எஸ்.பி.கே .தென்னரசு துவக்கி வைத்தார். 

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Mar 3, 2024, 02:08 PM IST
  • ஓரு வருடத்திற்கு வாரந்தோறும் ஒருநாள் விலையில்லா ரொட்டி, பால், முட்டை, பழம் வழங்கும் விழா.
  • மாவட்ட தலைவர் எஸ்.பி.கே .தென்னரசு துவக்கி வைத்தார். .
  • விழாவில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம்: குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவக்கம் title=

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழக வெற்றிக் கழக கிழக்கு ஒன்றியம் சார்பில் மாகறல் கிராமத்தில் ஓரு வருடத்திற்கு வாரந்தோறும் ஒருநாள் விலையில்லா ரொட்டி, பால், முட்டை, பழம் வழங்கும் விழாவினை மாவட்ட தலைவர் எஸ்.பி.கே .தென்னரசு துவக்கி வைத்தார். 

மேலும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நிலையில், அருகிலுள்ள அங்கன்வாடி மையங்களில் சொட்டு மருந்து போடப்பட்டு வரும் குழந்தைகளுக்கு விலையில்லா ஊட்டச்சத்து பொருட்களும்  வழங்கப்பட்டன.

ஏற்கனவே தெற்கு ஒன்றியம் சார்பில் மாகறல் கிராமத்தில் வாரந்தோறும் இலவச உணவு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது குழந்தைகளுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் விலையில்லாமல் இப்பொருட்கள் இலவசமாக தமிழக வெற்றிக் கழக (Tamilaga Vettri Kazhagam) நிறுவனர் விஜய் அவர்களின் அறிவுரையின் பேரில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்ற பணிகளை மாவட்டம் முழுவதும் செய்திட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தலைவர் தென்னரசு தெரிவித்தார்.

மேலும் படிக்க | மோடி கம்பீரமாக வலம் வரவில்லை.. பில்டிங் தா ஸ்ட்ராங்கு பேஸ்பட்டம் வீக்கு - அன்பில் மகேஷ்!

ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதியில் ஊட்டச்சத்தை அளிக்கும் இது போன்ற பொருட்களை தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அளிப்பதை பொதுமக்கள் பெரிதும் வரவேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர் அணி தலைவர் ராகுல், காஞ்சி ஒன்றிய கிழக்கு தலைவர் வினோத், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித், மேற்கு ஓன்றிய தலைவர் சந்தோஷ்  உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | 2026ல் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத ஆட்சி வரும் - அண்ணாமலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News