கோவை மற்றும் நீலகிரியில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் கோவை புறப்பட்டார். மாலை கோவை சென்றடைந்த அவரை திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். விமான நிலையம் முதல் ஹோப்ஸ் மற்றும் பீளமேடு வரை பல்வேறு இடங்களில் மேல தாளங்கள் முழங்க முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க | ஹெச்.ராஜா திண்டுக்கல் அருகே கைது
முதலமைச்சரின் வருகையையொட்டி வழி நெடுகிலும் திமுகவினர் குவிந்திருந்தனர். ரேஸ் கோர்ஸில் இருக்கும் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரவு அங்கு தங்குகிறார். பின்னர் காலையில் வ.ஊ.சி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவான பொறுநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். மேலும், தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்க கண்காட்சியையும் திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாலை கார் வழியாக நீலகிரி செல்கிறார். அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியை பார்வையிடும் முதலமைச்சர், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் சென்னை திரும்புகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி கோவை மற்றும் நீலரிகிரி மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை கிளம்புவதற்கு முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் சிறையில் இருந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு விடுதலையான பேரறிவாளனை சந்தித்தார். அப்போது பேரறிவாளனை ஆரத்தழுவிய வாழ்த்துகளை கூறினார். இந்த சந்திப்பின்போது அற்புத்தம்மாளும் உடனிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR