தமிழகத்தில் இதுவரை 14 கோடி பணம் பறிமுதல் -சத்யபிரதா சாஹூ!

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில், இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13.90 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

Last Updated : Mar 21, 2019, 01:37 PM IST
தமிழகத்தில் இதுவரை 14 கோடி பணம் பறிமுதல் -சத்யபிரதா சாஹூ! title=

மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில், இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13.90 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இத்தகவலை தெரிவித்துள்ளார், மேலும் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட, இதுவரை 29 ஆண்கள், ஒரு பெண் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலுக்கு 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் தமிழகத்தில் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது, இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13.90 கோடி பணம் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் அனுமதி பெற்ற 21,999 துப்பாக்கிகளில், 18,768 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும், 32 துப்பாக்கிகள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் மத்திய சென்னைக்கு மட்டும் 3 பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தொகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மாநில அளவில் செலவினங்களை பார்வையிட சிறப்பு அதிகாரியாக மது மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News