இந்த பகுதிகளில் விரைவில் தடுப்பணைகள் கட்டப்படும்! அமைச்சர் துரைமுருகன் உறுதி!

தமிழ்நாட்டில் ஆறுகளில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் அடுத்த ஆண்டு பல்வேறு இடங்களில் தேவையான அளவு தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி.

Written by - RK Spark | Last Updated : Dec 5, 2024, 08:29 PM IST
    அணைகள் கட்டப்பட வேண்டிய கட்டப்பட்டுள்ளது.
    தடுப்பணைகள் கட்ட கோப்புகளை வழங்கியுள்ளேன்.
    நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
இந்த பகுதிகளில் விரைவில் தடுப்பணைகள் கட்டப்படும்! அமைச்சர் துரைமுருகன் உறுதி! title=

வேலூர் மாவட்டம் காட்பாடி உட்கோட்டத்தில் பிரம்மபுரம் புதிய காவல் நிலையம் நிலையம் அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி புதிய காவல் நிலையம் தற்காலிகமாக பழைய காட்பாடியில் அமைக்கப்பட்டது. பிரம்மபுரம் போலீஸ் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் சூப்பிரண்டு பழனி, ஆய்வாளர் ஆனந்தன், மாநகராட்சி துணை மேயர் எம்.சுனில் குமார், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அன்பு சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | உதயசூரியன் என்றாலே கண்கள் கூசும் ஆட்களுக்கு.... விடியல் தெரியாது - ஸ்டாலின் தடாலடி!

இதனையடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், தமிழ்நாட்டில் அணைகள் கட்டப்பட வேண்டிய இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளது குறிப்பாக பெரிய ஆற்றுப்பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேடி தான் அணைகளை கட்ட வேண்டும், ஆனால் ஆறுகளில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடுகிற வெள்ளம் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடுகிறது. இதனால் எந்த பயனும் இல்லை. ஆங்காங்க சிறிய சிறிய ஆணைகளை கட்டினால் நாள் அல்லது ஐந்து அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கும்.

இதன் காரணமாக விவசாய கிணறுகள் மற்றும் நீர் நீர்நிலைகளில் விவசாயத்திற்கு போதுமானதாக தண்ணீர் தேங்கி விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும். குறிப்பாக குகையநல்லூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பொழுது தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு முன்பதாக மாயனூர் பகுதியில் கட்டப்பட்ட  தடுப்பு அணையினால், இப்போது அப்பகுதியில் வளம் கொழிக்கிறது. கடந்த ஆண்டு எங்கெல்லாம் தடுப்பணை கட்டப்பட வேண்டும் அறிவிக்கப்பட்டதோ அவையெல்லாம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேலும் அதிகமான தடுப்பணைகள் கட்ட அதற்கான கோப்புகளை வழங்கியுள்ளேன்.

ஆகவே ஆறுகளில் வீணாகச் செல்லும் தண்ணீரை இனிவரும் காலங்களில் தேக்கி வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்க ஐந்துக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் சரி செய்ய நீர்வளத்துறை சார்பில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்களை கொண்டு கணக்கெடுக்கும் பணிகள் மற்றும்  சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும் பாதிப்புகளை குறித்து எவ்வளவு பணம் தேவை என்பதை குறித்தும் கணக்கெடுத்து வருகிறார்கள் என தமிழக நீர்வளத்துறை துரைமுருகன் கூறினார். வெள்ளம் பாதிப்புக்கான நிவாரணத் தொகை குறைவாக இருப்பதாக எதிர்கட்சிகள் கூறுகிறார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு இது குறித்து நிதி அமைச்சரை தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று கூறினார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News