மாணவியை மருமகளாக பாவித்த ஆசிரியை: மகனுடன் பேசச் சொல்லி வற்புறுத்தல்

மடத்துக்குளம் அருகே மாணவியை மருமகளாக பாவித்த ஆசிரியை-இரவு நேரத்தில் மகனுடன் பேசச் சொல்லி வற்புறுத்தல்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 29, 2022, 11:31 AM IST
  • மாணவர்களுக்கு அலைபேசியில் தொந்தரவு
  • மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளால் ஒழுங்கு நடவடிக்கை
மாணவியை மருமகளாக பாவித்த ஆசிரியை: மகனுடன் பேசச் சொல்லி வற்புறுத்தல் title=

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில், கணித பாட முதுநிலை ஆசிரியராக பணியாற்றி வருபவர் சாந்தி பிரியா. இவரது வகுப்பில் படிக்கும் பனிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை மருமகளே என முறை வைத்து அழைத்து மருமகளாக பாவித்துள்ளார் அந்த ஆசிரியர்.

மேலும் அந்த மணவியிடம் அவரிடம் புகைப்படம் கேட்டும் தனது மகனிடம் அலைபேசியில் பேசுமாறும் வற்புறுத்தி உள்ளார். அத்துடன் மாணவிகளை, வகுப்பறையில் அவமானப்படுத்துவதும். பாடத்தில் இல்லாத கேள்விகளைக் கேட்டு அவமதிப்பதும். இரவு நேரங்களில் அலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வதும், அலைபேசியை எடுக்க மறுத்தவர்களை மதிப்பெண்களில் கை வைப்பேன் என மிரட்டுவதும், மாணவர்களை மிகவும் தரக்குறைவாக நடத்துவது மற்றும் தனது கணவரை இரவில் தூங்கும்போது நினைத்துக் கொள்ள வேண்டும் எனக்கூறி, தரக்குறைவான செயல்களில் ஈடுபட்டுள்ளதாக, பெற்றோர்கள் சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவருட்செல்வி அவர்களிடம் புகார் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | Indian Railways: வந்தே பாரத் விரைவு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி!

பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பள்ளியில் பணி செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பள்ளிக்கு நேரடி ஆய்வு மேற்கொண்டு, காவல்துறை உதவியுடன் விசாரணை நடத்தி, மாணவர்களிடம் கடிதம் மூலமாக ஒப்புதல் பெற்று, ஆசிரியை சாந்தி பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டார். மாணவிகளிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட ஆசிரியையால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஆயிரத்தை கோடிகளாக்கிய இந்தியாவின் Warren Buffet கடைபிடித்த 5 முதலீட்டு டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News