ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும் குமரி ஆனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.  

Written by - ZEE Bureau | Last Updated : Aug 18, 2021, 10:48 AM IST
ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் காலமானார்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும் குமரி ஆனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.

தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி நியமன ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் (Tamilisai soundararajan) தனது தாயார் இன்று அதிகாலை இறந்து விட்டதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ | Puducherry: தமிழிசையின் எண்ட்ரி, காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவு காட்டுகிறதா?

"என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார். 

 

 

 

 

என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை 04.00 மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.  

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News