நடிகர் வீட்டில் 200 பவுன் கொள்ளை - சிக்கினார் ஒருவர்

நடிகர் ஆர்.கே எனப்படும் ராதாகிருஷ்ணன் வீட்டில் கொள்ளையடித்தவர்களில் ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 23, 2022, 08:44 PM IST
  • எல்லாம் அவன் செயல் படத்தில் நடித்தவர் ஆர்.கே
  • இவர் வீட்டில் சமீபத்தில் கொள்ளை நடந்தது
  • ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்
நடிகர் வீட்டில் 200 பவுன் கொள்ளை - சிக்கினார் ஒருவர் title=

எல்லாம் அவன் செயல் என்ற படத்தில் நடித்தவர் நடிகர் ஆர்.கே. (ராதாகிருஷ்ணன்). இவர் நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனி, 12ஆவது குறுக்கு தெருவில் வசித்துவருகிறார். இவரது வீட்டில் இவர் மனைவி ராஜி மற்றும், மகள், மருமகனும் வசித்துவருகின்றனர். கடந்த 10ஆம் தேதி ராஜி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராஜியை கத்தியைக் காட்டி மிரட்டி அவரது கை, கால்களை கட்டிப்போட்டனர். 

பின்னர் பீரோவில் இருந்த 200 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து ராதாகிருஷ்ணன் நந்தம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். விசாரணையில் ராதாகிருஷ்ணன் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த நேபாளத்தை சேர்ந்த ரமேஷ் என்கிற டிரம்மர் மாயமாகியிருந்தது தெரியவந்தது. 

அதுமட்டுமின்றி கொள்ளை நடப்பதற்கு 3 நாள்களுக்கு முன்பு காவலாளி ரமேஷுடன் அவரது உறவினர்கள் 2 பேர் நேபாளத்தில் இருந்து வந்து தங்கியிருக்கின்றனர். கொள்ளை நடந்த நாள் அன்று காவலாளி ரமேஷ் விடுப்பு எடுத்து வெளியே சென்று இருந்தார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை என்பதையும் காவல் துறையினர் தெரிந்துகொண்டனர்.

மேலும் அவருடன் தங்கியிருந்த உறவினர்களும் மாயமாகியிருப்பதால் அவர்கள் மீது காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்தச் சூழலில் கொள்ளையர்களை பிடிக்க பரங்கிமலை துணை கமிஷனர் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டிருந்தனர். 

மேலும் படிக்க | தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல்: அரசுக்கும் மருத்துவ கவுன்சிலுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை, வட மாநிலத்தில் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது. மேலும் தலைமறைவான வீட்டின் காவலாளி மற்றும் அவருடன் தங்கியிருந்த உறவினர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மேலும் படிக்க | ஆளுநரே திமுகவை தட்டிக்கேளுங்கள் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News