இந்திய - இலங்கை இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
டெல்லியில் நாளை மீனவர் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு ஏற்படுத்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை அமைச்சர்கள் மட்டத்திலாக நடைபெறுகிறது. இதேபோலே டெல்லியில் கடந்த 2-ம் தேதி இந்திய - இலங்கை இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்திய தரப்பில் 83 நாட்கள் மீன்பிடி அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இலங்கை மீனவ பிரதிநிதிகள் ஏற்காததால் அப்பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் டெல்லியில் நாளை இந்திய - இலங்கை இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோரும், இந்திய சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை தமிழக மீனவர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.