விமானத்தில் பாஜக அரசுக்கு எதிராக முழக்கமிட்ட இளம் பெண்ணுடன், விமானம் தரையிறங்கியதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். தற்போது இந்த காணொளி வைரலாகி வருகிறது.
இன்று குற்றாலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி விமானம் மூலம் சென்றார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அப்பொழுது அவருடன் அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற இளம் பெண், அவரை பார்த்ததும் “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்று முழக்கமிட்டு உள்ளார். தொடர்ந்து விமானத்தில் முழக்கமிட்ட படியே வந்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த தமிழிசை சவுந்தரராஜன், விமானம் தூத்துக்குடி வந்து தரையிறங்கியதும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். இதனால் அங்கு சிறுது நேரம் பரபரபப்பு ஏற்ப்பட்டது.
#WATCH BJP Tamil Nadu President Tamilisai Soundararajan got into an argument with a co-passenger at Tuticorin airport. The passenger who has now been detained had allegedly raised 'Fascist BJP Govt down down' slogan #TamilNadu pic.twitter.com/TzfyQn3IOo
— ANI (@ANI) September 3, 2018
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது, என்னை பார்த்ததும் ஒரு நடுத்தர வயது பெண், எங்கள் கட்சிக்கு (பாஜக) விரோதமான கோஷங்களை தொடர்ந்து எழுப்பிய படியே வந்தார். அவரின் செயல்களை பேர்க்கும் போது, அவரது தோற்றம் எனக்கு அச்சுறுத்தலை தந்தது. அந்த பெண்ணுக்கு பின்னால் சில அமைப்பு இருப்பதாக நான் உணர்கிறேன் எனக் கூறினார்.