மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த, மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சேகர்; பவுஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்;
பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்; கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி தரப்பு மற்றும் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி;
தூம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த சக்கணன்; ஆப்பக்கூடல் கிராமத்தைச் சேர்ந்த, மின்வாரிய கள உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சங்கீதா கணவர் சித்தையன்;
கொட்டாம்பட்டி, மணப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த யுவராஜா; திருப்பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த, போர்மேன் ஆக பணிபுரிந்து வந்த முத்துலட்சமி கணவர் வாசுதேவன்;
ஆனைமலை கிராமத்தைச் சேர்ந்த குமார்; மூன்னாடு கிராமத்தைச் சேர்ந்த சிபி; கீழ்குந்தா கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன்; மதுசூதனபுரம் கிராமத்தைச் சேர்ந்த மகிமா;
ஆலக்குடி கிராமத்தைச் சேர்ந்த அழகுராஜ் மனைவி செல்வசுந்தரி; படப்பை மின் துணை நிலையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த மாயக்கண்ணன்;
தண்டலம் கிராமத்தில் உள்ள மின்சார அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஜானகிராமன்;ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
மேற்கண்ட 15 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
திண்டுக்கல் அம்பாத்துரை கிராமம், திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரசு பேருந்தும், லாரியும் மோதிய விபத்தில், பேருந்தில் பயணம் செய்த சீனியம்மாள், பெனிடிக்ட் சஞ்சய், சோமசுந்தரம், நாராயணன் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை
அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.